சிறுமி கையிலிருந்த கத்தி தவறுதலாக குத்தி சிறுவன் மரணம்

ஈப்போ: தீபா­வளி பண்­டி­கைக்­காக வீட்டை அலங்­க­ரித்துக் கொண்­டி­ருந்த போது, சிறுமி ஒரு­வர் கையில் வைத்­தி­ருந்த கத்தி தவ­று­த­லாக குத்­தி­ய­தில் 7 வயது சிறு­வன் ஒரு­வன் உயி­ரி­ழந்­து­விட்­டான்.

மலே­சி­யா­வின் ஈப்­போ­வில் தீபா­வ­ளிக்கு முதல் நாளன்று நடந்த இச்­சம்­ப­வம் அக்­கு­டும்­பத்தை மட்­டு­மல்­லா­மல் அக்­கம்­பக்­கத்­தி­ன­ரை­யும் சோகத்­தில் ஆழ்த்­தி­விட்­டது.

இந்த பரி­தாப சம்­ப­வம் தீபா­வளிக்கு முதல் நாளன்று இரவு மணி 10.20 அள­வில் சித்­தி­ய­வான் தாமான் செம்­பாகா கம்­போங் கோவி­லுள்ள ஒரு வீட்­டில் நிகழ்ந்­ததாக 'மலாய் மெயில்' செய்தி கூறுகிறது.

ஜெய­சுதா வின்­னே­சன் தீபா­வ­ளிக்­காக தமது வீட்டை அலங்க­ரித்­துக்கொண்­டி­ருந்­தார்.

அப்­போது கயிற்றை வெட்­டு­வ­தற்­காக தமது 11 வயது மக­ளான மது­ரி­ஷா­வி­டம் கத்­தியை எடுத்து வரும்­படி ஜெய­சுதா கூறி­யுள்

­ளார்.

மது­ரி­ஷா­வும் கத்­தியை எடுத்­துக்­கொண்டு வேக­மாக சென்று­கொண்­டி­ருந்­தார்.

அப்போது அண்டைவீட்­டி­ல் வசிக்கும் ஆதித்­தி­யன் சிறுமியிடம் வேக­மாக ஓடி வந்தபோது, அவள் மீது மோதி­ய­தால், அவளது கையிலி­ருந்த கத்தி தவ­று­த­லாக சிறுவனின் நெஞ்­சில் குத்­தி­விட்டதாக உறவினர் ஒருவர் கூறினார்.

“இந்த சம்­ப­வத்­தைக் கண்டு அதிர்ச்­சிக்­குள்­ளான நாங்­கள் அனை­வ­ரும் உட­ன­டி­யாக ஆதித்­தி­யனை ஸ்ரீ மஞ்­சோங் மருத்­து­வ­

ம­னை­யின் அவ­சர சிகிச்சை பிரி­வுக்குச் கொண்­டுச் சென்­றோம்,” என்­றார் சிறு­வ­னின் உற­வி­னர் ஒரு­வர்.

அங்கு ஆதித்­தி­யனைப் பரி­சோ­தனை செய்த மருத்­து­வர் அவன் உயிரிழந்துவிட்டதை உறு­திப்­ப­டுத்­தி­ய­தாக உற­வி­னர்­கள் கூறி­னர். இந்த சம்­ப­வம் தொடர்­பாக ஜெய­சுதா போலிசில் புகார் செய்­துள்­ளார்.

இத­னி­டையே மருத்­துவ பரி­சோ­த­னைக்­காக ஆதித்­தி­யனின் உடல் ஈப்போ ராஜா பெர்­மை­சூரி பைனுன் மருத்­து­வம­னைக்குக் கொண்­டு செல்­லப்­பட்­டது.

இந்த சம்­ப­வத்தை உறு­திப்­ப­டுத்­திய மஞ்­சோங் மாவட்ட போலிஸ் தலை­வர் துணை ஆணை­யர் இந்த சம்பவம் குறித்து விசா­ரணை நடத்­தப்­பட்டு வரு­வ­தாகச் சொன்னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!