மலேசியாவில் 19 வயது மாணவி மீது கொலைக் குற்றச்சாட்டு

மலேசியாவில் 19 வயது மாணவி மீது கொலைக் குற்றச்சாட்டு

1 mins read
60063c8a-8d3c-4e30-9645-70ca83f2a1a2
நவம்பர் 1ஆம் தேதி சிட்டி நூர் சுரயா இஸ்மாயில் எனும் 19 வயது மாணவியைக் கொன்றதாக இன்று (நவம்பர் 16) நீதிமன்றத்தில் சிட்டி நூர் அதிரா அஸ்மி மீது குற்றம்சாட்டப்பட்டது. படம்: பெர்னாமா -

மலேசியாவில் 19 வயது பள்ளி மாணவி மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

நவம்பர் 1ஆம் தேதி சிட்டி நூர் சுரயா இஸ்மாயில் எனும் 19 வயது மாணவியைக் கொன்றதாக இன்று (நவம்பர் 16) நீதிமன்றத்தில் சிட்டி நூர் அதிரா அஸ்மி மீது குற்றம்சாட்டப்பட்டது.

காலை 9.00 மணியளவில் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட சிட்டி நூர் அதிரா மிக அமைதியாகக் காணப்பட்டார்.

ஹுலு தெங்கானுவில் டெலிமோங்க், ஜாலான் புக்கிட் டடோக்கில் உள்ள லுபுக் பத்துவில் உள்ள வீட்டில் காலை 8.30 மணிக்கும் 9.30 மணிக்கும் இடையே மாணவி சிட்டி நூர் சுரயா கொல்லப்பட்டார்.

இந்த வழக்கு ஜனவரி 10ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.