அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் ஞாயிறு காலையில் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் அதிபர் தேர்தலில் தோல்வியடைந்ததை சுருக்கமாக ஒப்புக்கொண்டார். ஆனால் அதிலிருந்து உடனே பின்வாங்கிய அவர், "ஒப்புக்கொள் வதற்கு ஒன்றுமில்லை," என்று கூறியுள்ளார்.
தேர்தல் முடிவுகளை எதிர்த்து நீதிமன்றத்தில் போராடப் போவதாகவும் அவர் சூளுரைத்துள்ளார்.
அடுத்த அதிபராக பொறுப்பு ஏற்கவிருக்கும் ஜோ பைடனுக்கு மோசமாகிவரும் கிருமிப்பரவலே தீராத தலைவலியாக இருந்து வரு கிறது. தடுப்பூசி தயாரிக்கும் நிறு வனங்களை விரைவில் சந்திக்க அவர் திட்டமிட்டுள்ளார்.
இதற்கிடையே திரு பைடனால் நியமிக்கப்பட்ட வெள்ளை மாளிகை யின் தலைமை அதிகாரியான ரோன் கிளெய்ன், புதிய நடவடிக்கை களை மேற்கொள்ள டிரம்ப்பின் நிர்வாகம் அனுமதியளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
நாட்டின் பாதுகாப்புக்கும் கொவிட்-19க்கு எதிராக போராடு வதற்கும் இது முக்கியம் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
சென்ற ஞாயிற்றுக்கிழமை அன்று கிருமித்தொற்று எண்ணிக்கை 11 மில்லியனையும் தாண்டியது. ஒரே வாரத்தில் ஒரு மில்லியனுக்கு தொற்றுச்சம்பவங்கள் கூடின. அந்த வேகத்தில் தொற்று அதிவேகத்தில் பரவி வருகிறது.
இந்த நிலையில் திரு பைடனின் அறிவியல் அறிஞர்கள், விரைவில் ஃபைசர் உள்ளிட்ட தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களின் அதிகாரி களைச் சந்திப்பார்கள்.
அப்போது நாடு முழுவதும் பரவலாக தடுப்பூசி போடுவதற்கான 'மாபெரும் தளவாடத் திட்டம்' உருவாக்கப்படும் என்று திரு கிளெய்ன் தெரிவித்தார்.
அமெரிக்காவில் இதுவரை 250,000 பேர் தொற்றுக்குப் பலியாகிவிட்டனர்.
சென்ற நவம்பர் 3ஆம் தேதி நடைெபற்ற அதிபர் தேர்தலில் 2016ல் குடியரசுக் கட்சி ெவற்றி பெற்ற மாநிலங்களையும் ஜோ பைடன் கைப்பற்றியுள்ளார்.
ஜனநாயக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் துணை அதிபரான அவர் தேசிய அளவில் தேவைக்கு அதிகமாக 290 தேர்வு சபை வாக்கு களையும் பெற்றுள்ளார். ஆனால் தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப் பதாகக் கூறியுள்ள அதிபர் டிரம்ப், இதுவரை அதற்கான ஆதாரத்தை வெளியிடவில்லை.

