நாட்டை எல்லாரும் சேர்ந்து ஆட்சி செய்வதன் மூலம் அரசியல் நிலைத்தன்மையை ஏற்படுத்த முடியும் என்றார் அவர்.
அம்னோ தலைமையிலான தேசிய முன்னணியின் பொதுச் செயலாளரான அன்னுவார் மூசா இதனை தெரிவித்தார்.
முன்னாள் பிரதமர் மகாதீர் முகம்மது தலைமையிலான கூட்டணி உட்பட நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகளை ஆளும் கூட்டணி நேரடியாக அணுக வேண்டும்.
மலேசியாவுக்கு தற்போது மெகா கூட்டணி தேவைப்படுகிறது. நீண்ட காலமாக தனிப்பட்ட நபர்களை மையமாக வைத்தே நமது அரசியல் கட்சிகள் செயல்பட்டுள்ளன. தனிப்பட்ட ஒருவருக்காக கட்சிகளும் போராடி வந்துள்ளன. இது போதும். குறைந்தது 12 அல்லது 13 கட்சிகளை உள்ளடக்கிய மெகா கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் விரைவில் ஈடுபடப் போகிறேன்," என்று ஃபேஸ்புக் பதிவில் அவர் குறிப்பிட்டார்.

