மலேசிய வெளிநாட்டு கல்வி நிலையங்கள் மூட முடிவு

மலேசிய வெளிநாட்டு கல்வி நிலையங்கள் மூட முடிவு

1 mins read
9b84922a-c7bc-4029-a5ac-11ce5e6d6373
படம்: ராய்ட்டர்ஸ் -

வெளிநாடுகளில் செயல்படும் கல்வி நிலையங்களை மூட மலேசிய அரசு முடிவு செய்து உள்ளது.

சிகாகோ, லாஸ் ஏஞ்சலஸ், ஹோ சி மின், பெர்த், நியூசிலாந்து ஆகிய ஐந்து இடங்களில் மலேசிய கல்வி நிலையங்கள் செயல்பட்டு வரு கின்றன.

மலேசியாவுக்கு அனைத்துலக மாணவர்களை ஈர்ப்பது கல்வி நிலையங்களின் நோக்கமாகும்.

ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு வெளிநாட்டு கல்வி நிலையங்கள் பெரிய அளவில் பங்காற்றவில்லை என்று துணை உயர்கல்வி அமைச்சர் டாக்டர் மன்சூர் ஒதுமான் தெரி வித்தார்.

நாட்டுக்கு வருமானத்தையும் தேடித் தரவில்லை என்றார் அவர்.

அமைச்சுகள் நிலையிலும் தொடர்புடைய அமைப்புகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்திய பிறகு பொதுச் சேவை பிரிவால் அமைக்கப்பட்ட வெளிநாட்டு கல்வி நிலையங்களை மூடுவதென முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரி வித்தார்.