'அமளியில் ஈடுபட்டோருக்கு எதிராக சட்டம் பாயும்'

'அமளியில் ஈடுபட்டோருக்கு எதிராக சட்டம் பாயும்'

1 mins read
0a174d7c-5280-4f43-9c9f-cf2643a6671b
தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் உள்ள போலிஸ் தலைமையகத்தின் மீது சாயம் வீசிய ஆர்ப்பாட்டக்காரர்கள். படம்: ராய்ட்டர்ஸ் -

பேங்­காக்: அண்மைக் கால­மாக தாய்­லாந்­துப் பிர­த­ம­ருக்­கும் மன்­ன­ரின் அதி­கா­ரத்­துக்­கும் எதி­ராக ஆர்ப்­பாட்­டங்­கள் நடை­பெ­று­கின்­றன. நாளுக்கு நாள் மோச­மாகி வரும் ஆர்ப்­பாட்­டங்­கள் அன்­றாட வாழ்க்­கையை முடக்­கக்­கூ­டும் என்று அஞ்­சப்­ப­டு­கிறது.

இந்­நி­லை­யில், தாய்­லாந்து போலிஸ் தலை­மை­ய­கத்­தின் மீது நேற்று முன்­தி­னம் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­கள் சாயம், கண்­ணாடி போத்­தல்­கள் ஆகி­ய­வற்றை வீசி­னர்.

தண்­ணீ­ரைப் பீய்ச்­சி­ய­டித்­தும் கண்­ணீர்ப் புகை வீசி­யும் அவர்­க­ளைக் கலைக்க போலி­சார் முயன்­ற­னர்.

இதைத் தொடர்ந்து, ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­க­ளுக்கு எதி­ரா­கக் கடு­மை­யான நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்றும் அதற்­காக அனைத்து சட்­டங்­களும் பயன்­ப­டுத்­தப்­படும் என்­றும் தாய்­லாந்­துப் பிர­த­மர் பிரா­யுட் சான் ஓ சா நேற்று தெரி­வித்­தார்.

"நிலைமை மேம்­ப­ட­வில்லை. வன்­முறை அதி­க­ரிக்­கும் அபா­யம் உள்­ளது. இதை முளை­யி­லேயே கிள்ளி எறி­யா­விட்­டால் நாட்­டுக்­கும் மதிப்­புக்­கு­ரிய மன்­ன­ருக்­கும் பாதிப்பு ஏற்­ப­டக்­கூ­டும்.

"எனவே சட்­டத்தை மீறிய ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­க­ளுக்கு எதி­ராக அர­சாங்­கம் அதன் நட­வ­டிக்­கை­க­ளைத் தீவி­ரப்­ப­டுத்­தும். அவர்­க­ளுக்கு எதி­ராக அனைத்து சட்­டங்­களும் பயன்­ப­டுத்­தப்­படும்," என்­றார் திரு பிரா­யுட்.

மன்­னரை மரி­யாதைக் குறை­வாகப் பேசு­வோ­ருக்கு எதி­ரா­கப் பயன்­ப­டுத்­தப்­படும் சட்­ட­மும் இதில் அடங்­குமா என்­பது குறித்து அவர் விவ­ரிக்­க­வில்லை.

மன்­னர் கேட்­டுக்­கொண்­ட­தற்கு இணங்க இந்­தச் சட்­டத்தை ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­க­ளுக்கு எதி­ராக இதுவரை பயன்­ப­டுத்­த­வில்லை என்று திரு பிரா­யுட் அண்­மை­யில் கூறி­யி­ருந்­தார்.