சுடச் சுடச் செய்திகள்

வெளிச்சத்துக்கு வந்த போர்க் குற்றங்கள்

குறைந்­தது 39 அப்­பாவி ஆப்­கா­னி­யர்­க­ளை­யும் கைதி­க­ளை­யும் தமது சிறப்­புப் படை­யி­னர் கொன்­றது தொடர்­பாக நம்­ப­த் தகுந்த ஆதா­ரங்­கள் கிடைத்­தி­ருப்­ப­தாக ஆஸ்­தி­ரே­லி­யா­வின் ராணுவ உயர் அதி­காரி ஒப்­புக்­கொண்­டுள்­ளார்.

அவர்­க­ளுக்கு எதி­ரா­கப் போர்க் குற்ற வழக்கு தொடுக்­கப்­பட வேண்­டும் என்­றும் இந்த விவ­கா­ரம் குறித்து விசா­ரணை நடத்த வேண்­டும் என்­றும் அவர் அர­சாங்க வழக்­க­றி­ஞர்­க­ளைக் கேட்­டுக்­கொண்­டார்.

“வீரர்­கள் சிலர் சட்­டத்­தைத் தங்­கள் கையில் எடுத்­துக்­கொண்­ட­னர். விதி­மு­றை­கள் மீறப்­பட்­டன. உண்­மையை மறைக்க கதை­கள் பின்­னப்­பட்­டன. கைதி­கள் கொலை செய்­யப்­பட்­ட­னர்,” என்று ஆஸ்­தி­ரே­லி­யா­வின் தற்­காப்­புப் படைத் தலை­வர் எங்­கஸ் கெம்­பல் தெரி­வித்­தார்.

ஆப்­கா­னிஸ்­தா­னில் ஆஸ்­தி­ரே­லி­யப் படை­கள் அத்­து­மீறி நடந்து அங்­குள்ள மக்­க­ளைக் கொடு­மைப்­ப­டுத்­தி­ய­தாக பல ஆண்­டு­க­ளுக்கு முன்பே செய்­தி­கள் வெளி­வந்தன. 2005க்கும் 2016க்கும் இடைப்­பட்ட கால­கட்­டத்­தில் அப்­பாவி ஆட­வர்­க­ளை­யும் சிறு­வர்­க­ளை­யும் ஆஸ்­தி­ரே­லிய வீரர்­கள் கொன்று குவித்­த­தாக ஆப்­கான் ஊட­கம் குற்­றம் சாட்­டி­யது.

இது­தொ­டர்­பாக 2016ஆம் ஆண்­டில் ஆஸ்­தி­ரே­லியா விசா­ர­ணை­யைத் தொடங்­கி­யது. இந்நிலையில், வீரர்களின் குற்றம் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக அறியப்படுகிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon