ஏறக்குறைய ஒரு மில்லியன் பேருக்கு சோதனை அடிப்படையில் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சீன நிறுவனமான சைனோஃபார்ம் அறிவித்துள்ளது. ஆனால் தடுப்பூசியின் செயல்திறன் குறித்த மருத்துவ ஆதாரங்களை அது வெளியிடவில்லை.
கடந்த ஜூலையிலிருந்து மாநில அரசு ஊழியர்கள், அனைத்துலக மாணவர்கள், அத்தியாவசிய ஊழியர்கள் உட்பட ஏறக்குறைய ஒரு மில்லியன் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
"இதுவரை ஒருமுறைகூட பக்கவிளைவுகள் ஏற்பட்டதாக புகார் வரவில்லை. சிலருக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே தென்பட்டு உள்ளன," என்று ஊடகங்களிடம் பேசிய சினோஃபார்ம் தலைவர் லியூ ஜிங்ஷென் தெரிவித்தார்.
ஐக்கிய அரபு சிற்றரசுகள், பஹ்ரைன், எகிப்து, ஜோர்தான், பெரு, அர்ஜெண்டினா உள்ளிட்ட நாடுகளில் சினோஃபார்ம் நிறுவனம் இரு தடுப்பூசிகளுக்கான இறுதிக்கட்ட சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.
இதற்கிடையே வரும் டிசம்பரில் கொவிட்-19 தடுப்பூசிகளை விநியோகிக்கும் சாத்தியமுள்ளதாக 'பயோன்டெக்'கின் தலைமை நிர்வாக அதிகாரி உகுர் சஹின் கூறியுள்ளார். அமெரிக்காவின் ஃபைசர் நிறுவனத்துடன் சேர்ந்து அவரது ஜெர்மன் 'பயோன்டெக்' நிறுவனம் தடுப்பூசிகளை தயாரித்து வரு கிறது. அனுமதி கிடைத்ததும் அமெரிக்கா அல்லது ஐரோப்பாவில் தடுப்பூசிகள் உடனே விநியோகிக் கப்படலாம்.
'ஸூம்' வழியாக ஊடகங்களிடம் பேசிய அவர், "முழு வேகத்தில் செயல்பட்டு வருகிறோம்," என்றார்.
இவ்வாண்டுக்குள் அமெரிக்கா அல்லது ஐரோப்பா அங்கீகாரம் வழங்கும் வாய்ப்புள்ளதாகவும் அவர் சொன்னார்.
மற்றொரு நிலவரத்தில் அமெரிக் காவின் தொற்றுநோய் நிபுணரான அந்தோணி ஃபெளசி, "ஃபைசர், மோடெர்னா ஆகிய இரண்டு தடுப்பூசிகளின் ஆற்றல் குறித்த புள்ளி விவரங்கள் வலுவாக இருப் பதாகத் தெரிவித்துள்ளார்.
இந்தப் புள்ளி விவரங்களை உணவு மற்றும் மருத்துவ நிர்வாகம் ஆய்வு செய்து இறுதி முடிவெடிக்கும் என்று மேலும் திரு ஃபெளசி கூறினார்.

