தடுப்பு மருந்து சோதனை: தீவிரம் காட்டும் நாடுகள்

தடுப்பு மருந்து சோதனை: தீவிரம் காட்டும் நாடுகள்

2 mins read
c34c6f25-3a22-4d9d-b6ea-dafe93df9bc4
புதுடெல்லி மேக்ஸ் மருத்துவ மனை தீவிர சிகிச்சைப் பிரிவில் நேற்று காணப்பட்ட கொவிட்-19 நோயாளி. படம்: ஏஎஃப்பி -

லண்­டன் மருந்து தயா­ரிப்பு நிறு­வ­ன­மான அஸ்ட்­ரா­ஸெ­னிக்கா புதிய பரி­சோ­த­னையை நேற்று தொடங்­கி­யது. கொவிட்-19 தொற்று அபா­யம் உள்­ளோ­ருக்கு 12 மாதங்­கள் வரை நீண்­ட­கால எதிர்ப்பு சக்­தியை தந்து முன்­னரே காக்­கக்­கூ­டிய மருந்­தின் பரி­சோ­தனை அது.

AZD7442 எனப்­படும் தடுப்பு மருந்­தின் ஆற்­ற­லை­யும் உடல்­ந­லப் பாது­காப்­பை­யும் சோதித்து அறி­யக்­கூ­டிய மூன்­றாம் கட்ட அனைத்­து­லக பரி­சோ­த­னை­யில் ஐரோப்­பா­வை­யும் அமெ­ரிக்­கா­வை­யும் சேர்ந்த 5,000 பேரை அந்­நி­று­வ­னம் ஈடு­ப­டுத்­தும். எதிர்ப்பு சக்­தியை உரு­வாக்­கக்­கூ­டிய இதர தடுப்பு ஊசி­களில் இருந்து இந்த மருந்து முற்­றி­லும் வேறு­ப­டு­வ­தாக அஸ்ட்­ரா­ஸெ­னிக்கா தெரி­வித்துள்­ளது.

தடுப்­பூசி பய­ன­ளிக்­காத, நோய் எதிர்ப்பு சக்­தி குறை­வாக உள்­ளோ­ருக்கு இந்த மருந்து நல்ல பல­னைத் தரும் என எதிர்­பார்க்­கப்ப­டு­வ­தா­க­வும் அது குறிப்­பிட்டு உள்­ளது.

இது தவிர, ஆக்ஸ்­ஃபர்ட் பல்­க­லைக்­க­ழ­கத்­து­டன் இணைந்து தனி­யாக கொவிட்-19 தடுப்­பூ­சியை உரு­வாக்­கும் முயற்­சி­யி­லும் அஸ்ட்­ரா­ஸெ­னிக்கா ஈடு­பட்டு வரு­கிறது.

இந்­நி­லை­யில், BNT162b2 என்­னும் தடுப்­பூ­சியை உரு­வாக்கி உள்ள ஃபைஸர் மற்­றும் பயோ­என்­டெக் நிறு­வ­னங்­கள் அதன் அவ­ச­ர­நிலை பயன்­பாட்­டுக்கு அனு­ம­தி கோரி உள்­ளன. இது­வரை சோதிக்­கப்­பட்­ட­தில் தங்­க­ளது மருந்­தால் உடல்­ந­லப் பாது­காப்­புக்கு அபா­யம் ஏற்­ப­ட­வில்லை என்­றும் 95 விழுக்­காடு தடுப்­பாற்­ற­லைக் கொண்­ட­தாக உள்­ளது என்­றும் சில தினங்­க­ளுக்கு முன்­னர் இந்­நி­று­வ­னங்­கள் கூட்­டா­கத் தெரி­வித்து இருந்­தன.

இந்­நி­லை­யில், மருந்­தின் அவ­ச­ர­நிலை பயன்­பாட்­டுக்கு அனு­மதி கோரி அமெ­ரிக்­கா­வின் உணவு, மருந்து நிர்­வா­கத் துறைக்கு விண்­ணப்­பித்து இருப்­ப­தாக ஃபைஸர் தலைமை நிர்­வாக அதி­காரி ஆல்­பர்ட் போர்லா தமது நிறு­வன இணை­யப்­பக்­கத்­தில் பதி­வேற்­றப்­பட்ட காணொ­ளி­யில் தெரி­வித்துள்­ளார்.

இதற்­கி­டையே, இந்­தி­யா­வின் ஹைத­ரா­பாத் நக­ரைத் தள­மா­கக் கொண்ட பாரத் பயோ­டெக் நிறு­வ­னம் தனது கோவாக்­ஸின் தடுப்­பூசி பரி­சோ­த­னை­யில் பங்­கேற்க பொது­மக்­க­ளுக்கு அழைப்பு விடுத்து உள்­ளது. பரி­சோ­தனைக் கூடங்களுக்கு அரு­கில் வசிப்­போர் வர­லாம் என்று கூறி­யுள்ள அந்­நி­று­வ­னம், 18 வய­துக்­குக் கீழ் உள்­ளோ­ருக்கும் ஏற் கெனவே கொவிட்-19 கிருமி தொற்­றி­யோ­ருக்கும் அனு­ம­தி இல்லை என்று தெரி­வித்­துள்­ளது.

கோவாக்­ஸின் தடுப்­பூ­சி­யின் மூன்­றாம் கட்ட பரி­சோ­த­னையை இவ்­வா­ரத் தொடக்­கத்­தில் பாரத் பயோ­டெக் தொடங்­கி­யது. இந்­தி­யா­வில் நடத்­தப்­படும் ஆகப்­பெ­ரிய தடுப்­பூசி பரி­சோ­த­னை­யாக அது கரு­தப்­ப­டு­கிறது.

குறிப்புச் சொற்கள்