ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணிகளிடையே பிரபலமான கடற்கரையில் சுறா தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தென்மேற்கு கேபிள் கடற்கரையில் சுறா தாக்கியதாக தகவல் கிடைத்ததால் அங்கு போலிசார் விரைந்தனர்.
சுறாவால் தாக்கப்பட்ட ஆடவரை மீட்டு போலிசார் கரை சேர்த்தனர். அவருக்கு உடனடியாக முதல் உதவி சிகிச்சை வழங்கப்பட்டது.
ஆனால் சுறா பல இடங்களில் கடித்து குதறியிருந்ததால் அவரை மருத்துவர்களால் காப்பாற்ற முடியவில்லை.
சுமார் 22 கிலோ மீட்டர் கேபிள் கடற்கரையில் சுறா மீன் தாக்குவது மிகவும் அரிது.
ஆனால் முதலைகள் தென்படுவதால் ஆண்டுக்கு இரண்டு முறையாவது இந்தக் கடற்கரை மூடப்படுவது வழக்கம்.

