ஏழை நாடுகளுக்கு 2.பி தடுப்பூசிகள் விநியோகம்

மாபெ­ரும் தடுப்­பூசி திட்­டத்­தின் ஒரு பகு­தி­யாக அடுத்த ஆண்டு இரண்டு பில்­லி­யன் தடுப்­பூ­சி­கள் ஏழை நாடு­க­ளுக்கு கப்­ப­லில் அனுப்பி வைக்­கப்­படும் என்று ஐநா­வின் சிறார் நல அமைப்­பான யூனி­செஃப் தெரி­வித்­தது.

எல்லா நாடு­க­ளுக்­கும் நியா­ய­மான முறை­யில் தடுப்­பூ­சி­கள் விநி­யோ­கிக்க வேண்­டும் என்று உலக நாடு­கள் வலி­யு­றுத்தி வரு­கின்­றன.

இந்த நிலை­யில் தடுப்­பூ­சி­களை விநி­யோ­கிப்­ப­தற்­காக 350 விமான மற்­றும் சரக்கு நிறு­வ­னங்­க­ளு­டன் யூனி­செஃப் பேச்சு நடத்தி வரு­கிறது. புருண்டி, ஆப்­கா­னிஸ்­தான், ஏமன் போன்ற நாடு­க­ளுக்கு உலக சுகா­தார நிறு­வ­னத்­தின் ‘கோவாக்ஸ்’ உல­க­ளா­விய தடுப்­பூசி ஒதுக்­கீட்டு திட்­டத்­தின் கீழ் முதல் கட்டமாக ஒரு பில்­லி­யன் தடுப்­பூ­சி­கள் விநி­யோ­கிக்­கப்­படும். “வர­லாற்­றுச் சிறப்­பு­மிக்க இந்த நட­வ­டிக்­கைக்கு போது­மான போக்­கு­வ­ரத்து வச­தி­கள் இருப்­பது உறுதி செய்­யப்­பட வேண்­டும்,” என்று யூனி­செஃப் விநி­யோ­கிப்­புப் பிரி­வின் இயக்­கு­நர் எட்­லெவா காடிலி தெரி­வித்­தார்.

கொவிட்-19 பர­வல் காரண­மாக அதிக ஆபத்­து­களை எதிர்­நோக்­கும் ஒவ்­வொரு நாட்­டுக்­கும் தடுப்­பூசி கிடைக்­கச் செய்­வதே கோவாக்ஸ் திட்­டத்­தின் முக்­கிய நோக்­க­மா­கும்.

அண்­மைய ‘ஜி20’ உச்­ச­நிலை மாநாட்­டி­லும் அதில் பங்­கேற்ற உல­கின் ஆகப்­பெ­ரிய பொரு­ளி­யல் நாடு­க­ளின் தலை­வர்­கள், ஏழை நாடு­களை உள்­ள­டக்கி அனைத்து நாடு­க­ளுக்­கும் சரி­ச­ம­மாக தடுப்­பூசிகளை விநி­யோ­கிக்க உறுதி கூறி­னர்.

“கொள்ளை நோய் பர­வு­வ­தற்கு முன்பே தடுப்­பூ­சி­களை சம­மாக விநி­யோ­கிக்­கும் ஏற்­பாடு எது­வும் இல்லை. இத­னால் மோச­மான நோய், மர­ணம், உடல் ஊனம் போன்­ற­வற்­றி­லி­ருந்து மில்­லி­யன் கணக்­கான குழந்­தை­களை காப்­பாற்ற முடி­யா­மல் போய்­விட்­டது,” என்று உலக சுகா­தார நிறு­வ­னம் தெரி­வித்­தது.

“கொவிட்-19 தடுப்­பூ­சி­கள், முன்­கள ஊழி­யர்­க­ளுக்­கான பாது­காப்பு கவ­சங்­கள் ஆகி­ய­வற்றை விநி­யோ­கிக்க தயா­ரா­வ­தற்கு முன்பு அனை­வ­ரது ஒத்­து­ழைப்பு தேவைப் ­ப­டுவதாக யூனி­செ­ஃப்­பின் காடிலி கூறி­னார்.

யூனி­செ­ஃப்­பின் கோவாக்ஸ் திட்­டத்­தின் மூலம் உல­கி­லேயே அதிக அளவு தடுப்­பூ­சி­கள் வாங்கப்­ ப­டு­கின்­றன. ஏறக்­கு­றைய 100 நாடு­க­ளின் சார்­பில் வழக்­க­மான நோய்த் தடுப்பு மற்­றும் நோய்ப் பர­வ­லுக்கு எதி­ராக இரண்டு பில்­லி­யன் தடுப்­பூ­சி­களை அது ஆண்­டு­ தோ­றும் வாங்கி வரு­கிறது.

இதற்­கி­டையே கொவிட்-19 தடுப்­பூ­சி­களை உரு­வாக்க பாடு­பட்டு வரும் பல்­வேறு மருந்து தயா­ரிப்பு மற்­றும் ஆய்வு நிலை­யங்­கள் இறு­திக் கட்ட சோத­னை­களை நடத்தி வரு­வதால் அடுத்த சில மாதங் களில் தடுப்பூசிகள் தயாராகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!