ஒழுங்கற்ற கட்டுப்பாடுகளால் பெருகும் தொற்று: ஹாங்காங்கில் ஆத்திரம்

2 mins read
d37b9d8c-fcb3-433f-bfa0-730b9707bc80
படம்: ஏஎஃப்பி -

ஹாங்­காங்: புதிய கிரு­மிப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்த ஹாங்­காங்­கில் விதிக்­கப்­படும் சமூ­கக் கட்­டுப்­பா­டு­கள் குழப்­பத்தை ஏற்­ப­டுத்­து­வதா­கக் குறை­கூ­றல் எழுந்­துள்­ளது. வர்த்­தக முத­லா­ளி­களும் குடி­யி­ருப்­பா­ளர்­களும் குழப்­ப­மும் ஆத்­தி­ர­மும் அடைந்­தி­ருப்­ப­தாக புளூம்­பெர்க் செய்தி நிறு­வனம் தெரி­வித்துள்­ளது. சுமார் ஏழு மில்­லி­யன் மக்­க­ளைக் கொண்ட ஹாங்­காங், ஆசி­யா­வின் நிதி நடு­வம் என்­பது அறிந்­ததே.

அங்கு தற்­போ­தைய கிரு­மிப் பர­வல் விகி­தம் 100,000 பேருக்கு 81 பேர் என்று உள்­ளது. உல­கின் மற்ற பகு­தி­க­ளைக் காட்­டி­லும் ஹாங்­காங்­கில் வேக­மாக அடுத்­

த­டுத்த கட்­ட­மாக கிரு­மிப் பர­வல் நிகழ்ந்து வரு­கிறது. தற்­போது அங்கு நான்­கா­வது கட்ட கிரு­மிப் பர­வ­லைச் சமா­ளிக்க அர­சாங்­கம் கட்­டுப்­பா­டு­களை விதித்து வரு­கிறது.

கிரு­மிப் பர­வல் மற்­றும் கட்­டுப்­பா­டு­க­ளின் நிலை குறித்து ஹாங்­காங்­கின் சிட்டி பல்­க­லைக்­

க­ழக சுகா­தா­ரப் பாது­காப்பு நிபு­ண­ரான துணைப் பேரா­சி­ரி­யர் நிக்­க­லஸ் தாமஸ் விளக்­கி­னார்.

"கொள்­ளை­நோய் பர­வ­லில் ஹாங்­காங் இது­வரை அதிர்ஷ்­ட­ வ­ச­மான நிலை­யில் உள்­ளது என்­ப­தில் சந்­தே­க­மில்லை. அதே­நே­ரம் இங்­குள்ள குறை­யும் தெளி­வா­கத் தெரி­கிறது. கட்­டுப்­பா­டு­கள் எப்­போது நடப்­புக்கு வரு­கின்­றன என்­ப­தும் அவை எப்­போது நீக்­கப்­ப­டு­கின்­றன என்­ப­தும் பொதுமக்களுக்குச் சரிவர தெரிவதில்லை," என்­றார்.

கிரு­மிப் பர­வலை முறி­ய­டிப்­

ப­தற்­கான கட்­ட­மைப்பு அண்டை வட்­டார நாடு­க­ளான நியூ­சி­லாந்து, தென்­கொ­ரியா, சிங்­கப்­பூர் போன்­ற­வற்­றில் உள்­ள­தைப்­போல இருக்க வேண்­டும் என ஹாங்­காங்­கின் குடி­யி­ருப்­பா­ளர்­களும் வர்த்­த­கர்­களும் பெரி­தும் எதிர்­பார்ப்­ப­தாக புளூம்­பெர்க் தெரி­வித்துள்­ளது.

மாதக்­க­ணக்­கில் நடை­பெற்ற அர­சாங்க எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டங்­க­ளா­லும் அத­னைத் தொடர்ந்து நீடிக்­கும் கொள்ளை நோய் பர­வ­லா­லும் ஏற்­கெ­னவே சுருங்­கி­விட்ட ஹாங்­காங் பொரு­ளி­யல், தற்­போ­தைய ஒழுங்­கற்ற கட்­டுப்­பா­டு

­க­ளால் மேலும் நெருக்­க­டி­யைச் சந்­தித்து வரு­வ­தாக அச்­செய்தி குறிப்­பி­டு­கிறது.

குறிப்புச் சொற்கள்