தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கருக்கலைப்பை சட்டரீதியாக அனுமதிக்கும் மசோதாவுக்கு அர்ஜெண்டினாவில் எதிர்ப்புக் குரல்கள்

1 mins read
d4a2f9f1-24bb-4449-9c41-be9003d71fab
கருக்கலைப்பை சட்டரீதியாக அனுமதிக்கும் மசோதாவை எதிர்த்து அர்ஜெண்டினாவில் ஆயிரக்கணக்கானோர் நேற்று (நவம்பர் 28) ஆர்ப்பாட்டம் நடத்தினர். படம்: ராய்ட்டர்ஸ் -

கருக்கலைப்பை சட்டரீதியாக அனுமதிக்கும் மசோதாவை எதிர்த்து அர்ஜெண்டினாவில் ஆயிரக்கணக்கானோர் நேற்று (நவம்பர் 28) ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கத்தோலிக்க, இவான்ஜெலிக்க சமய அமைப்புகளைச் சேர்ந்த பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தலைநகர் பியூனோஸ் ஐரிசில் உள்ள நாடாளுமன்றத்துக்கு வெளியே அவர்கள் அனைவரும் கூடினர்.

இந்த மசோதாவை சட்டமாக்கக்கூடாது என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் முழக்கமிட்டனர்.

குறிப்புச் சொற்கள்