மலேசிய கையுறை தயாரிப்பு நிறுவன ஊழியர் தங்குமிடங்களில் போதிய வசதி இல்லை: சட்ட ரீதியாக நடவடிக்கை

மலேசிய கையுறை தயாரிப்பு நிறுவன ஊழியர் தங்குமிடங்களில் போதிய வசதி இல்லை: சட்ட ரீதியாக நடவடிக்கை

1 mins read
0e3eb5f0-9c31-4be4-a1c5-b0003d953b33
தங்குமிடங்கள் வசதி குறைவாகவும் போதிய அளவுக்கு காற்றோட்ட வசதி இல்லாமலும் இருந்தன. சமையலறை மற்றும் கழிவறை வசதிகளும் மோசமாக இருந்ததாகக் கூறப்பட்டது. படம்: தி ஸ்டார் -
multi-img1 of 2

உலகின் மிகப் பெரிய கையுறை தயாரிப்பு நிறுவனமான 'டாப் குளோவ்', அதன் ஊழியர்களுக்கு வழங்கிய தங்குமிடத்தின் தரம் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் இல்லாததால் அதன் மீதான விசாரணையைத் தொடங்கியுள்ளது மலேசியா. சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

அந்த நிறுவனத்தின் 6 கிளைகளை மனிதவள அமைச்சின் தொழிலாளர் துறை பார்வையிட்டது. ஊழியர்களின் தங்குமிடம் பற்றி விசாரணை நடத்தப்பட்டது.

தங்குமிடங்கள் வசதி குறைவாகவும் போதிய அளவுக்கு காற்றோட்ட வசதி இல்லாமலும் இருந்தன. சமையலறை மற்றும் கழிவறை வசதிகளும் மோசமாக இருந்ததாகக் கூறப்பட்டது.

19 விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், அந்த நிறுவனத்திற்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அந்த நிறுவனத்தில் பணிபுரிந்த பலருக்கு கொவிட்-19 தொற்று பரவியதையடுத்து இந்த நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன.