சுடச் சுடச் செய்திகள்

அமெரிக்காவில் கொவிட்-19 தடுப்பு மருந்தை மிகக் குறைந்த வெப்பநிலையில் விநியோகிக்க 'உலர் ஐஸ்' தயார்

அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் அமைந்துள்ள கேப்பிடோல் கார்பானிக் எனும் நிறுவனம் கொவிட்-19 தடுப்பு மருந்துகளை மிகக் குறைந்த வெப்பநிலையில் சேமித்து விநியோகிக்கும் பணியில் ஈடுபட இருப்பதாக ஏஎஃப்பி செய்தி குறிப்பிடுகிறது.

‘உலர் ஐஸ்’ தயாரிக்கும் அந்த நிறுவனம், தடுப்பு மருந்துகளை விநியோகிக்கும்போது தேவைப்படும் மிகக் குறைந்த வெப்பநிலையுடன் கலன்களைப் பராமரிக்கும் என்று கூறப்படுகிறது.

60 ஆண்டுகளாக நடத்தப்படும் அந்த குடும்ப வர்த்தகமான கேப்பிட்டோல் கார்பானிக், கொவிட்-19 விநியோகத்தில் இறங்க அமெரிக்க அரசாங்கம் விரைவில் அனுமதி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபைசர் நிறுவனம் கேப்பிடோல் நிறுவனத்தின் உதவியை இதற்காக நாடியுள்ளது. ஃபைசர் நிறுவனத்தின் தடுப்பு மருந்து பயன்பாட்டு அங்கீகாரம் குறித்து அடுத்த வாரம் அமெரிக்கா முடிவெடுக்கும் என்று கூறப்படுகிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon