சுடச் சுடச் செய்திகள்

மகனை 28 ஆண்டுகளாக வீட்டிற்குள் பூட்டி வைத்து கொடுமைப்படுத்தியதாக 70 வயது தாய் கைது

தன் மகனை 28 ஆண்டு கால­மாக வீட்­டிற்­குள் பூட்டி வைத்­தி­ருக்­க­லாம் என்ற சந்­தே­கத்­தின் பேரில் 70 வயது மூதாட்டி ஒரு­வரை சுவீ­டன் போலி­சார் கைது செய்­துள்­ள­னர்.

இப்­போது 41 வய­தா­கும் அந்த ஆட­வ­ரின் உட­லில் மோச­மான காயங்­கள் காணப்­பட்­ட­தா­க­வும் அவர் தனது பற்­களை இழந்­தி­ருந்­த­தா­க­வும் போலிஸ் தெரி­வித்­தது. சுவீ­ட­னின் ஸ்டாக்­ஹோ­மின் புற­ந­கர்ப்­ப­கு­தி­யில் உள்ள ஹனிங்கே என்­னும் இடத்­தில் உள்ள குடி­யி­ருப்­புப் பகு­தி­யில் உள்ள ஒரு வீட்­டில் அடைத்து வைக்­கப்­பட்­டி­ருந்த ஆட­வ­ரைக் கண்­ட­தா­க­வும் அவ­ரின் நிலை படு­மோ­ச­மாக உள்­ள­தா­க­வும் பெண் ஒரு­வர் போலி­சுக்­குத் தக­வல் தெரி­வித்­தார். அத­னை­ய­டுத்து அவ்­வி­டத்­திற்கு விரைந்து வந்த போலி­சார் அந்த ஆட­வ­ரைக் காப்­பாற்­றி­னர். பல ஆண்­டு­க­ளாக சுத்­தம் செய்­யப்­ப­டாத நிலை­யில் கெட்ட நாற்­ற­ம­டிக்­கும் அந்த வீட்­டில் அந்த ஆட­வர் அடைத்­து­வைக்­கப்­பட்­டி­ருந்­தார். 11 வய­துச் சிறு­வ­னாக இருந்­த­போது அவ­னது பள்­ளிப் படிப்பை நிறுத்­திய அவ­னது தாய், 28 ஆண்­டு­க­ளாக அவனை வீட்­டில் சிறை வைத்­தி­ருக்­கி­றார் என முதல் கட்ட விசா­ர­ணை­யில் தெரி­கிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon