அமெரிக்கா: பிப்ரவரிக்குள் 100 மில்லியன் பேருக்கு தடுப்பூசி

அமெரிக்கா: பிப்ரவரிக்குள் 100 மில்லியன் பேருக்கு தடுப்பூசி

2 mins read
80034fde-99d5-40a8-9437-7d9a440df138
சிகாகோ மருத்துவமனை ஒன்றில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள 85 வயது கொவிட்-19 நோயாளி, திரையில் தம் குடும்பத்தாரிடம் பேசுகிறார். படம்: ராய்ட்டர்ஸ் -

பிப்­ர­வரி மாதத்­திற்­குள் அமெ­ரிக்­கர்­கள் 100 மில்­லி­யன் பேருக்கு கொரோனா கிரு­மிக்கு எதி­ரா­கத் தடுப்­பூசி மருந்து செலுத்­தப்­ப­ட­லாம் என்று கூறப்­ப­டு­கிறது. 'ஆப­ரே­ஷன் வார்ப் ஸ்பீட்' என்ற அர­சாங்க-தனி­யார் பங்­கா­ளித்­துவ அமைப்பு இதனை நேற்று முன்­தி­னம் தெரி­வித்­தது.

அமெ­ரிக்­கா­வில் உள்ள பெரி­ய­வர்­க­ளின் எண்­ணிக்­கை­யில் கிட்­டத்­தட்ட 40% இது என்று கூறப்­படு­கிறது. 'ஃபைசர்' மற்­றும் 'மொடர்னா' தடுப்­பூ­சி­க­ளுக்கு ஒப்பு­தல் வழங்­கப்­பட்­டால், இன்­னும் சில வாரங்­களில் 100 மில்­லி­யன் இலக்கை நோக்­கிச் செல்­லும் பய­ணம் தொடங்­கி­வி­டும் என்று நம்­பப்­ப­டு­கிறது. முதி­ய­வர்­கள், சுகா­தாரப் பரா­ம­ரிப்பு ஊழி­யர்­கள், முன்­களப் பணி­யா­ளர்­கள் போன்ற அபா­ய­நி­லை­யில் உள்­ள­வர்­க­ளுக்கு முத­லில் தடுப்­பூசி போடப்­படும் என்று அவர் தெரி­வித்­தார்.

அமெ­ரிக்­கா­வில் கொரோனா கிரு­மித்­தொற்­றால் உயி­ரி­ழந்­தோரின் ஒரு நாள் எண்­ணிக்கை நேற்று முன்­தி­னம் 3,157ஐ எட்­டி­யது. ஏப்­ரல் 15ஆம் தேதி­யன்று 2,603 உயி­ரிழப்­பு­கள் பதி­வா­னதே இது­வரை ஆக அதிக எண்­ணிக்­கை­யாக இருந்து வந்த நிலை­யில், புதன்­கி­ழ­மை­யன்று உறு­தி­செய்­யப்­பட்ட உயி­ரி­ழப்­பு­கள், அதை­விட 20% அதி­க­மாக உள்­ளது. கிரு­மித்­தொற்று தாக்­கத்­தால் ஆத­ரவு தர முடி­யா­மல் அந்­நாட்டு சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புக் கட்­ட­மைப்­பு­களும் திணறு­கின்­றன.

இது­வரை, அமெ­ரிக்­கா­வில் பதி­வான கிருமி உயி­ரி­ழப்பு எண்­ணிக்கை குறைந்­தது 273,799 ஆக உள்­ளது. 13.9 மில்­லி­ய­னுக்­கும் மேற்­பட்­ட­வர்­க­ளுக்கு கிருமி தொற்­றி­யுள்­ள­தாக ஜான் ஹப்­கின்ஸ் பல்­கலைக்­க­ழ­கம் வெளி­யிட்ட தக­வல்­கள் கூறு­கின்­றன.

இந்­நி­லை­யில் விடு­மு­றைக் காலத்­தில் அனை­வ­ரும் ஒன்­று­கூடு­வ­தா­லும் குளிர்­கா­லத்­தால் மக்­கள் வீட்­டுக்­குள் அடைந்து கிடப்­ப­தா­லும் கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­களும் உயி­ரி­ழப்­பு­களும் மேலும் அதி­க­ரிக்­கும் என்று சுகா­தார நிபு­ணர்­கள் எச்­ச­ரித்­துள்­ள­னர். இதற்­கி­டையே அமெ­ரிக்­கா­வில் ஒரு நாளில் பதி­வா­கும் கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­க­ளை­விட அடுத்த நாள் பதி­வா­கும் எண்­ணிக்கை அதி­க­ரித்­துள்­ளது.

ஆக அதி­க­மான உயி­ரி­ழப்பு­கள் பதி­வான அதே நாளன்று, மருத்­து­வ­ம­னை­களில் கிரு­மித்­தொற்று கார­ண­மாக சிகிச்சை பெற்­று­வ­ரு­வோ­ரின் எண்­ணிக்­கை­யும் 100,000ஐ தாண்­டி­விட்­ட­தாக 'கொவிட் டிராக்­கிங் புரோ­ஜெக்ட்' தர­வு­கள் தெரி­வித்­துள்­ளன. நவம்­பர் 10 முதல் மருத்­து­வ­ம­னை­களில் நாளுக்கு நாள் அதி­க­ரித்­துக்­கொண்டே போகும் கொவிட்-19 நோயா­ளி­க­ளின் எண்­ணிக்கை, மருத்­து­வ­ம­னை­களுக்கு மேலும் அழுத்­தத்­தைத் தரும் என்று அஞ்­சப்­ப­டு­கிறது.

911 அவ­ச­ரத் தொடர்­புக் கட்­ட­மைப்பு, 'நெருக்­கடி நிலை­யில்' இருப்­ப­தாக நாட்­டின் மருத்­துவ வண்­டிச் சேவை­க­ளைப் பிர­தி­நிதிக்­கும் அமெ­ரிக்க ஆம்­புலன்ஸ் கழ­கம் நேற்று முன்­தினம் தெரி­வித்­தது. இதற்­கிடையே வரும் நாட்­களில் மருத்­து­வ­ம­னை­க­ளின் நிலைமை மேம்­ப­டு­வ­தா­கத் தெரி­ய­வில்லை என்று அமெ­ரிக்­கா­வின் நோய்க் கட்­டுப்­பாடு, தடுப்பு மையம் முன்­னு­ரைத்­துள்­ளது.