வெளிநாட்டு ஊழியர் தங்குமிட வசதிகளை மேம்படுத்த முதலாளிகளுக்கு வலியுறுத்து

வெளிநாட்டு ஊழியர் தங்குமிட வசதிகளை மேம்படுத்த முதலாளிகளுக்கு வலியுறுத்து

1 mins read
530bd83b-ba9b-4fc0-9ef0-8dc72a3a489a
'டாப் குளோவ்' நிறுவன ஊழியர்கள் தங்குமிடத்தை அதிகாரிகள் பார்வையிட்டனர். படம்: மலேசிய ஊடகம் -

சிலாங்­கூ­ரில் வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளி­டையே கிரு­மித்­தொற்று பர­வி­ய­தால் அவர்­கள் தங்­கு­மி­டங்­களில் கடு­மை­யான கட்­டுப்­பா­டு­களை அர­சாங்­கம் அமல்­ப­டுத்தி வரு­கிறது.

இந்த நிலை­யில் ஊழி­யர் தங்­கு ­மி­டங்­களில் போது­மான வச­தி­களை உறு­திப்­ப­டுத்த வேண்­டும் என்று முத­லா­ளி­களை அரசு வலி­யு­றுத்தி யுள்ளது.

நாட்­டுக்­குள் வெளி­நாட்டு ஊழி­யர்­கள் அனு­ம­திக்­கப்­ப­டு­வ­தற்கு முன்பே அவர்­க­ளுக்­குத் தேவை­யான வச­தி­களை தயா­ராக வைத்­தி­ருக்க வேண்­டும் என்று பாது­காப்­புக்­கான மூத்த அமைச்­சர் இஸ்­மா­யில் சப்ரி யாக்­கோப் தெரி­வித்­தார்.

குறைந்­த­பட்ச வீட்டு வச­தி­களை உறு­திப்­ப­டுத்­தும் 1990ஆம் ஆண்­டின் சட்­டத்தை முத­லா­ளி­கள் அனை­வ­ரும் கட்­டா­ய­மாக பின்­பற்ற வேண்­டும் என்­றார் அவர்.

"கடந்த காலங்­களில் அங்­கு­மிங்­கு­மாக சிலர் மட்­டும் சட்­டத்­தைப் பின்­பற்­றி­னர். ஆனால் சில வாரங்­க­ளுக்கு முன்பு கையு­றை ­க­ளைத் தயா­ரிக்­கும் உல­கின் முன்­னணி நிறு­வ­ன­மான 'டாப் குளோவ்' தொழிற்­சா­லை­களில் ஊழி­யர்­க­ளி­டையே கிரு­மித்­தொற்று பர­வி­ய­தால் அரசு கட்­டுப்­பா­டு­களை கடு­மை­யாக்­கி­யி­ருக்­கிறது," என்று அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

இதற்­கி­டையே தடுப்­பூ­சி­க்கு அனு­மதி வழங்­கு­வ­தில் பொறுமையு டன் முடிவு எடுக்கப்படும் என்று மலே­சியா கூறியுள்ளது.

பிரிட்­ட­னில் ஃபசைர்-பயோன்­டெக் தடுப்­பூ­சி­களை அடுத்த வாரத்­தி­லி­ருந்து பொது­மக்­க­ளுக்கு விநி­யோ­கிக்க அனு­மதி வழங்­கப்­பட்டு ­உள்­ளது.

இதனை அணுக்­க­மா­கக் கண்­கா­ணிக்­கப் போவ­தாக மலேசிய சுகா­தார தலைமை இயக்­கு­நர் நூர் ஹிஷாம் அப்­துல்லா கூறி­னார்.

குறிப்புச் சொற்கள்