35 தங்கப்பதக்கங்களை வென்று சாதனை

1 mins read
fe1bb0ed-03e4-464d-8dea-ae98572c5d90
படம்: ஊடகம் -

ஜோகூரில் உள்ள லாபிஸ் தமிழ்ப்பள்ளி அனைத்துலக புத்தாக்க அறிவியல் கண்டுபிடிப்பு மற்றும் ஆசிய பசிபிக் பசுமை புத்தாக்கப் (E-Thic) போட்டியில் 35 தங்கப்பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது.

மறுசுழற்சி பொருட்களைக் கொண்டு கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டிய இப்போட்டியில் 30 மாணவர்களை உள்ளடக்கிய ஆறு குழுக்களும் ஐந்து ஆசிரியர்களைக் கொண்ட ஒரு குழுவும் பங்கேற்றதாக இணையச் செய்தி ஒன்று தெரிவிக்கிறது.

இணையம் வழி நடத்தப்பட்ட போட்டி யில் மலேசியாவில் உள்ள அனைத்து வகை பள்ளிகளும் பங்கேற்றபோதிலும் பல்வேறு பிரிவுகளில் லாபிஸ் தமிழ்ப் பள்ளி குழுவினரின் 35 கண்டுபிடிப்புகள் நடுவர்களின் அங்கீகாரத்தைப் பெற்று சிறந்தவை என அறிவிக்கப்பட்டன.