மருத்துவர், மனைவி மரணம்; மருத்துவ வசதிகளின் நிலை மீது சந்தேகம்

மருத்துவர், மனைவி மரணம்; மருத்துவ வசதிகளின் நிலை மீது சந்தேகம்

1 mins read
fbf47b90-2ea4-4f20-a011-f911c152b405
-

இந்­தோ­னீ­சி­யா­வின் கிழக்கு ஜாவாமாநி­லத்­தில் மூத்த மருத்­து­வ­ரும் அவரது மனை­வி­யும் கொவிட்-19 தொற்­றால் மாண்­டது அந்­நாட்­டின் சுகா­தார முறை­ஒழுங்­காக இல்லை என்­பதை உணர்த்­துவ­தாக ராய்ட்­டர்ஸ் செய்தி தெரி­விக்­கிறது.

டாக்­டர் சார்­ஜோனோ உடோமோ டிசம்­பர் 1ஆம் தேதி தாம் பணி­யாற்­றிய மருத்­து­வ­ம­னை­யில் கொவிட்-19 சிகிச்­சைக்­காக அனு­ம­திக்­கப்­பட்­டார்.

24 மணி நேரத்­தில் அவ­ருக்கு மூச்­சுத்­தி­ண­றல் ஏற்­பட்­ட­தால் சுர­பாயா நக­ரில் செயற்கை சுவா­சக் கரு­வியை மருத்­து­வ­மனை நிர்­வாகம் தேடி வரு­வ­தாக மற்­றொரு மருத்­து­வர் கூறி­னார்.

அடுத்த சில மணி நேரங்­களில் மருத்­து­வ­ரும் அவ­ருக்கு முன்­னர் சிகிச்சை பெற்று வந்த அவ­ரது மனைவி மார்­டி­னி­யும் அடுத்­த­டுத்து உயி­ரி­ழந்­த­னர்.

சுகா­தார வச­தி­கள் கொள்­ளை­நோய் அபா­யத்­தைச் சமா­ளிக்­கும் அள­வுக்கு இல்­லா­த­தால் மோச­மான நிலைக்கு இந்­தோ­னீ­சியா தள்­ளப்­பட்டு உள்­ள­தாக ராய்ட்­டர்ஸ் கூறி­யது.