சீனாவில் சுரங்க விபத்தில் 18 தொழிலாளர்கள் பலி

சீனாவில் சுரங்க விபத்தில் 18 தொழிலாளர்கள் பலி

1 mins read

பெய்­ஜிங்: சீனாவில் நிலக்­கரி சுரங்­கத்­தில் ஏற்பட்ட விபத்தில் 18 பேர் கொல்லப்பட்டனர்.

சுரங்­கத்­தில் மேலும் ஐவர் சிக்கி ­யி­ருக்­க­லாம் என நம்­பப்­ப­டு­கிறது.

மீட்­புப்பணி­கள் துரி­த­க­தி­யில் நடை­பெற்று வரும் நேற்று 18 சடலங்கள் மீட்கப்பட்டன. ஒருவர் மட்டும் உயிரோடு மீட்கப்பட்டார்.

சென்ற வெள்­ளிக்­கி­ழமை அன்று சோங்­சிங்­கில் உள்ள சுரங்­கத்­தில் கரியமில வாயு கசிந்­த­தால் விபத்து ஏற்­பட்­டது.

மொத்தம் 24 ஊழி­யர்­கள் சுரங்­கத்­தில் சிக்­கிக் கொண்­ட­னர்.

பூமிக்­க­டி­யில் சுரங்­கம் தோண்­டும் சாத­னங்­களை அகற்­றிக்­கொண்­டி­ருக்­கும்­போது ஊழி­யர்­கள் விபத்­தில் சிக்­கிக் கொண்­ட­தா­க தெரிகிறது. இரண்டு மாதங்­க­ளுக்கு முன்புதான் இந்­தச் சுரங்­கம் மூடப்­பட்­டது. விபத்­துக்­கான கார­ணத்தை அறிய அதி­கா­ரி­கள் விசா­ரணை நடத்தி வரு­கின்­ற­னர்.