சீனாவின் ஐந்து பரிமாற்றத் திட்டங்களை நிறுத்தி வைத்த அமெரிக்கா

1 mins read

வாஷிங்­டன்: அமெ­ரிக்கா, சீனா­வுக்கு எதி­ராக மற்­றொரு அதி­ரடி நட­வ­டிக்­கையை எடுத்­துள்­ளது. அதா­வது சீனா நிதி­யு­த­வி­ய­ளிக்­கும் ஐந்து பரி­மாற்­றத் திட்­டங் ­க­ளுக்கு அமெ­ரிக்கா முற்­றுப்­புள்ளி வைத்­துள்­ளது.

சீனா­வின் பிர­சா­ரக்­ க­ரு­வி­களாக அவை செயல்­ப­டு­வ­தாக அமெ­ரிக்கா குற்­றம்­சாட்­டி­யுள்­ளது.

இது தொடர்­பாக வெளி­யு­றவு அமைச்­சர் மைக் பொம்­பியோ வெளி­யிட்ட அறிக்­கை­யில் கலா­சார பரி­மாற்­றத் திட்­டம் எனும் போர்­வை­யில் அமெ­ரிக்­கா­வின் சட்­டத்­தின்கீழ் பரி­மாற்­றத் திட்­டங்­கள் நடத்­தப்­ப­டுவதாக தெரி வித்தார். இதன் மூலம் வெளி­நாட்டு நிதி­யைப் பயன்­ப­டுத்தி அமெ­ரிக்க அர­சாங்க அதி­கா­ரி­கள் பய­ணம் மேற்­கொள்ள முடி­யும். "இதர பரி­மாற்­றத் திட்­டங்­கள் இரு தரப்­புக்­கும் நன்மை அளிக்கக்­ கூ­டி­யவை, ஆனால், சீனா­வின் முழு நிதி­யு­த­வி­யு­டன் நடத்­தப்­படும் ஐந்து திட்­டங்­கள் கேள்­விக்­கு­றி­ய­தாக இருக்­கின்றன," என்றார் திரு பொம்­பியோ சொன்­னார்.

"சீனா­வில் பொது­மக்­க­ளைச் சந்­தித்துப் பேசுவதற்குப் பதி­லாக கம்­யூ­னிஸ்ட் கட்சி அதி­கா­ரி­க­ளு­டன் நேரடித் தொடர்பை ஏற்­ப­டுத்­தும் வகை­யில் பரி­மாற்­றத் திட்­டங்கள் வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ளன," என்­றும் பொம்பியோ அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார்.