சோல்: கொரோனா கிருமித் ெதாற்றிலிருந்து படிப்படியாக மீண்டு வந்த தென் கொரியாவில் மீண்டும் கிருமிப்பரவல் அதிகரித்து உள்ளது.
ஆறு மாதங்களில் இல்லாத அளவுக்கு 583 பேர் கிருமியால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதம் முதல் அைலயில் பாதிக்கப்பட்டவர்களுடன் ஒப்பிடுகையில் தற்போது அதிகமானோர் தென்கொரியாவில் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
தலைநகரான சோலிலும் அதனைச் சுற்றியுள்ள இடங்களிலும் தொற்று அதிவேகத்தில் பரவி வரு கிறது.
நாட்டின் 52 மில்லியன் மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் தலைநகரைச் சுற்றி வசித்து வருகின்றனர்.
புதிய தொற்றுச் சம்பவங்களில் 235 சம்பவங்கள் சோலில் பதிவாகியுள்ளன.
இதனால் சனிக்கிழமையிலிருந்து ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வர்த்தகங்கள், சில்லறைக் கடைகள் செயல்பட இரவு 9.00 மணிக்கு மேல் அனுமதியில்லை. பொதுப்போக்குவரத்தும் மாலை வேளைகளில் முப்பது விழுக்காடு குறைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் ஆசியாவின் 4வது பெரிய பொருளியல் நாடான தென்கொரியாவுக்கு மேலும் பின்னடைவு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் கொவிட்-19 தொற்றால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 121க்கு கூடியுள்ளது.
இதனால் மோசமாக பாதிக்கப்பட்டவர்களுக்கான படுக்கைகள் குறைந்து வருகின்றன.
வெள்ளிக்கிழமை அன்று செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத் துறை அதிகாரிகள், தீவிர சிகிச்சை தேவைப்படுவோருக்கு 59 படுக்கை களே இருப்பதாகத் தெரிவித்தனர்.
இரு வாரங்களில் இதுவும் குறைந்துவிடும் என்று அவர்கள் கூறினர்.
தென்கொரியாவில் மொத்தம் 36,916 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கிருமித்தொற்றுக்கு 540 பேர் மாண்டனர்.

