எல் சல்வடோர்- தீப்பிழம்பாக வெடித்த ஆலை

எல் சல்வடோர்- தீப்பிழம்பாக வெடித்த ஆலை

1 mins read
c2a37a7e-87d6-4043-b737-b267728e8cbf
-

எல் சல்வடோரின் தலைநகர் சான் சல்வடோரிலுள்ள எரிவாயு ஆலை நேற்று பிற்பகல் அளவில் தீப்பிடித்ததில் அங்கு வெடிப்புகள் ஏற்பட்டன. இந்தப் பெருந்தீயைக் காட்டும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.

சம்பவத்தில் எவரும் மாண்டதாகவோ காயமடைந்ததாகவோ தகவல் வெளிவரவில்லை. சம்பவத்தில் 15 லாரிகள் மட்டுமே சேதமடைந்திருப்பதாக அந்நாட்டின் தீயணைப்புத் துறை கூறியது. இந்தப் பெருந்தீயை அணைக்க 15 தீயணைப்பாளர்கள் திரட்டப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பெருந்தீயை சில நிமிடங்களிலேயே அணைத்த வீரர்களை வெகுவாகப் பாராட்டுவதாக அந்நாட்டின் அதிபர் நயிப் புகேலே தெரிவித்தார்.