தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அவசர கால பயன்பாட்டுக்கான தடுப்பூசி; அனுமதி வழங்குமாறு இந்தியாவிடம் ஃபைசர் கோரிக்கை

1 mins read
205dd2d3-ae07-4e68-ba84-2fe0b2c8512b
-

இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கான அவசர கால பயன்பாட்டுக்கான அனுமதியை வழங்குமாறு ஃபைசர் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.

கொவிட்-19 தடுப்பூசிகள் தயாரிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. தடுப்பூசிகளை தயாரித்து வரும் பல நாடுகளுக்கு இடையே இந்தியாவில் 3 தடுப்பூசிகள் இறுதிக்கட்ட பரிசோதனைகளில் ஆராயப்பட்டு வரும் இந்நேரத்தில் ஃபைசரின் இம்முடிவு வெளிவந்துள்ளது.

இந்த தடுப்பூசியை பயன்படுத்த பிரிட்டனும் பஹ்ரைனும் தற்காலிக அனுமதி வழங்கியுள்ளன.