கமல்ஹாசன்: பெண்களுக்கு முன்னுரிமை வழங்க 'மய்யம் மாதர் படை' தொடக்கம்

கமல்ஹாசன்: பெண்களுக்கு முன்னுரிமை வழங்க 'மய்யம் மாதர் படை' தொடக்கம்

2 mins read
47331d09-ccfc-4072-b3c5-359144b38afb
-

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியில் பெண்களுக்கு முன் னுரிமை வழங்கும் வகையில் 'மய்யம் மாதர் படை' என்ற புதிய பிரிவு தொடங்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் 'மய்யம் மாதர் படை' எனும் புதிய பிரிவு ஆரம்பிக்கப்படுகிறது.

"இந்த மாதர் படையில் கட்சி சாராத ஆனால், மக்கள் நலனிலும் தமிழகத்தைச் சீரமைப்பதிலும் அக்கறை கொண்ட பெண்களும் இணைந்து பங்காற்றலாம். "பெண் சமத்துவத்தை வெறும் பேச்சோடு நிறுத்திக்கொள்ளாமல், தனது அடுத்தடுத்த நடவடிக்கைகளிலும் பெண்களுக்கு சரியான பங்களிப்பைக் கொடுத்து அவர்களின் கரம் உயர்த்த விரும்புகிறது மக்கள் நீதி மய்யம் கட்சி.

"இந்தக் கட்சியின் கட்டமைப்பு, அணிகளில் பொறுப்பு வகிக்கும் மகளிரும் கட்சி உறுப்பினர்கள், அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த பெண்களும் இதில் பங்கு பெற லாம். சில செயல் திட்டங்களை உடனுக்குடன் செயல்படுத்துவதற்கு வசதியாக ஒன்றிணைந்து செயல்படுவதே இந்தப் பிரிவின் முக்கிய நோக்கமாக இருக்கும்.

"தமிழகம் முழுவதும் பொது நலனிலும் மாற்று அரசியலிலும் ஆர்வம் கொண்ட பெண்களை மக்கள் நீதி மய்யம் கட்சியில் பங்கேற்கச் செய்வதும் வாக்காளர்களைப் பெருமளவில் சந்தித்து கட்சியின் திட்டங்களையும் கொள்கைகளையும் கொண்டு சேர்ப்பதும் இப்பிரிவுக்கான பணிகளில் முதன்மையானது.

"வரும் 12 மற்றும் 13ஆம் தேதிகளில் நடைபெற உள்ள வாக்காளர் சிறப்பு முகாமில் தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி களிலும் மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர்கள் சார்பில் பூத் அமைக்கப்படுகிறது.

"இதில் பெண்களின் பங்களிப்பை உறுதி செய்யும் பணியை 'மய்யம் மாதர் படை' மேற்கொள்ளஉள்ளது. இப்பிரிவு மகளிர் அணி யின் சென்னை மண்டல துணைச் செயலாளர் சினேகா மோகன்தாஸ் மேற்பார்வையில் செயல்படும்," என்று கூறப்பட்டுள்ளது.