பேராக்கில் புதிய ஆட்சியை அமைக்க அம்னோ தீவிரம்

பேராக்கில் புதிய ஆட்சியை அமைக்க அம்னோ தீவிரம்

2 mins read
a8a8c002-5bf1-43fc-bd04-e11a5dbaed91
எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து செயல்பட அம்னோ தயாராக இருப்பதாக அதன் தலைவர் ஸாஹித் ஹமிடி கூறி உள்ளார். கோப்புப்படம்: த ஸ்டார். -

கோலா­லம்­பூர்: பேராக்­கில் புதிய ஆட்­சியை அமைக்க அம்னோ தீவிர முயற்­சி­யில் இறங்­கி­யி­ருக்­கிறது.

இதற்­காக எதிர்க்­கட்­சி­க­ளு­டன் இணைந்து செயல்­ப­ட­வும் தயா­ராக இருப்­ப­தாக அது அறி­வித்­து உள்­ளது.

பேராக்­கில் எதிர்த்­த­ரப்­பைச் சேர்ந்த பக்­கத்­தான் ஹரப்­பான் மீண்­டும் ஆட்­சிக்­குத் திரும்ப அனு­ம­திக்­கக்கூடாது என்று அம்­னோ­வின் நட்­புக்­கட்­சி­யான பாஸ் கட்சி வலி­யு­றுத்தி வரு­கிறது.

ஆனால் எதிர்க்­கட்­சி­க­ளு­டன் கூட்டுச் சேர தயா­ராக இருப்­ப­தாக அம்னோ கூறியுள்ளது.

பேராக் விவ­கா­ரத்­தில் மலே­சி­யாவை ஆளும் கூட்­ட­ணிக் கட்­சி­ க­ளுக்கு இடையே மோதல் ஏற்­பட்­டுள்­ள­தால் ஏற்­கெ­னவே ஆட்­டம் கண்­டி­ருக்­கும் பிர­த­மர் முஹை­தீன் தலை­மை­யி­லான ஆட்­சிக்கு பாதிப்பு ஏற்டலாம் என அர­சி­யல் கவ­னிப்­பா­ளர்­கள் கூறு­கின்­ற­னர்.

கடந்த வெள்­ளிக்கிழமை அன்று காணொளி வழி­யாக நடை­பெற்ற வாக்­கெ­டுப்­பில் தோல்­வி­ய­டைந்­த­தால் பேராக் முதல்­வ­ரும் பெர்­சத்­துக் கட்­சி­யின் துணைத் தலை­வ­ரு­மான ஃபைசல் அசு­மு­வின் ஆட்சி கவிழ்ந்­தது.

இதற்கு அம்னோ முக்­கிய கார­ண­மாக இருந்­தது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலை­யில் நேற்று செய்­தி ­யா­ளர்­க­ளி­டம் பேசிய அம்னோ தலை­வர் ஸாஹித் ஹமிடி, தற்­போ­தைய கூட்­டணி தொடர முயற்சி எடுக்­கப்­படும் என்­றார்.

"எல்­லாமே சாத்­தி­யம். தற்­போ­தைய கூட்­ட­ணியைத் தொடர முயற்சி செய்­வோம்.

"ஆனால் நிலைமை மாறி­னால் அதற்கு ஏற்ற சூழ்­நி­லையை உறுதி செய்­வோம்," என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ஆனால் பேராக்­கில் புதிய அர­சாங்­கத்தை அமைக்­கும் முயற்­சி­யில் பங்­கேற்கமாட்­டோம் என்று பாஸ் கட்சி அறி­வித்­துள்­ளது.

இதே போல பெர்­சத்­துக் கட்­சி­யும் இதி­லி­ருந்து ஒதுங்­கி­யி­ருக்க முடிவு செய்­துள்­ளது.

இத­னைச் சுட்­டிக்­காட்­டிய அகமது ஸாஹிட் ஹமிடி, பேராக்­கில் வலு­வான அர­சாங்­கத்­திற்கு புதிய அர­சி­யல் கூட்­ட­ணியை உரு­வாக்­கு­வதைத் தவிர வேறு வழி யில்லை என்றார்.