கொவிட்-19 தடுப்பூசி இந்தோனீசியாவுக்கு வந்தது

இந்தோனீசியா 1.2 மில்லியன் முறை போடுவதற்கான கொவிட்-19 தடுப்பூசி மருந்து அளவைப் பெற்­று­விட்­டது. இன்­னும் இரண்டு வாரங்­களில் தடுப்­பூசி விநி­யோ­கத்­துக்­கான விதி­மு­றை­கள் முடி­வா­கி­வி­டும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

கொரோனா கிரு­மித்­தொற்­றுக்கு எதி­ராக உரு­வாக்­கப்­பட்ட சீனா­வின் ‘சினோ­வேக் பயோ­டெக்’ தடுப்­பூ­சி­கள், ஞாயிற்­றுக்­கி­ழமை இரவு ஒன்­பது மணி­ய­ள­வில் ஜகார்த்­தா­வின் சுகார்னோ-ஹட்டா விமான நிலை­யத்தை அடைந்­தன.

பின்­னர் மேற்கு ஜாவா­வில் உள்ள ‘பயோ ஃபார்மா’வின் வளா­கத்­திற்­குத் தடுப்­பூசி பொட்­ட­லங்­கள் கொண்டு ­செல்­லப்­பட்­டன.

மேலும் 1.8 மில்­லி­யன் ‘சினோ­வேக்’ தடுப்­பூசி மருந்து அள­வு­கள் ஜன­வரி மாதத்­தில் கொண்டு ­வ­ரப்­படும் என்று கூறப்­பட்­டது.

தடுப்­பூசி மருந்­து­கள் படிப்­படி­யாக கொண்­டு­வ­ரப்­ப­டு­வது போல், தடுப்­பூ­சி­யைப் போடும் திட்­ட­மும் படிப்­ப­டி­யா­கச் செயல்­படுத்­தப்­படும் என்­றும் மருத்­துவ ஊழி­யர்­க­ளுக்­கும் பொதுச் சேவை அதி­கா­ரி­க­ளுக்­கும் முன்­னு­ரிமை வழங்­கப்­படும் என்­றும் அந்­நாட்டு கொவிட்-19 பணிக்­கு­ழு­வின் தலை­வ­ரும் அமைச்­சரு­மான திரு ஏர்­லங்கா ஹார்­டார்டோ நேற்று தெரி­வித்­தார்.

சில­ருக்கு தடுப்­பூசி இல­வ­ச­மாகப் போடப்­படும். மற்ற சிலர் தடுப்­பூ­சிக்­கான செலவை ஏற்க வேண்­டும் என்று பொரு­ளி­யல் விவ­கார ஒருங்­கி­ணைப்பு அமைச்­ச­ரா­க­வும் உள்ள திரு ஏர்­லங்கா கூறி­னார்.

தடுப்­பூ­சிக்­கான செலவை ஏற்­ப­வர்­கள், தங்­க­ளுக்கு விருப்­ப­மான தடுப்­பூசி மருந்து வகை­யைத் தேர்ந்­தெ­டுக்­க­லாம். யார் முத­லில் வரு­கி­றார்­களோ அவர்­கள் இத்­திட்­டத்­தின்­கீழ் தகு­தி­பெ­று­வார்­கள் என்று கூறப்­பட்­டது.

தடுப்­பூசி போடும் திட்­டத்தை அமல்­ப­டுத்­து­வ­தற்­கான உறு­தி­யான தேதி­யைக் குறிப்­பி­டாத நிலை­யில் ஜன­வரி மாதத்­தில் தொடங்­கும் என்று கூறப்­ப­டு­கிறது.

தடுப்­பூ­சி­களை எவ்­வாறு நாடு முழு­வ­தும் விநி­யோ­கிப்­பது என்­பது குறித்து அர­சாங்­கம் தற்­போது ஆலோ­சித்து வரு­கிறது. நாட்­டின் 34 மாகா­ணங்­க­ளுக்­கும் தடுப்­பூசியை விநி­யோ­கிக்­கும் கட்­டமைப்பு உறு­தி­யா­ன­தும் பணி­களைத் தொடங்­கி­வி­ட­லாம் என்று அதி­பர் ஜோக்கோ விடோடோ தெரி­வித்­தார்.

கிட்­டத்­தட்ட 10,134 சமூ­க சுகா­தார நிலை­யங்­களும் 2,877 மருத்­து­வ­ம­னை­களும் இத்­திட்­டத்­தில் பங்­கேற்­கும் என்று கூறப்­பட்­டது.

ஆத­ர­வு சாத­னங்­கள், மனித வளங்­கள், விநி­யோ­கிக்­கும் கட்­ட­மைப்பு ஆகி­யவை உறு­திப்­ப­டுத்­தப்­பட்ட பின்­னரே விநி­யோ­கப் பணி­கள் தொடங்­கும் என்று திரு ஜோக்கோவி கூறி­னார்.

இந்­தோ­னீ­சி­யா­வின் 270 மில்­லி­யன் மக்­களில் 107.2 மில்­லி­யன் பேருக்­குத் தடுப்­பூசி மருந்து போடு­வதே திட்­ட­மா­கும். 18 வய­துக்­கும் 59 வய­துக்­கும் இடைப்­பட்­ட­வர்­களே இதற்­குத் தகு­தி­பெற்­றுள்­ள­னர்.

பின்­னா­ளில் தட்­டுப்­பாடு ஏற்­ப­டா­மல் தடுக்க, தடுப்­பூ­சிக்­கான அதன் கையி­ருப்­பில் 15 விழுக்­காட்டை இந்­தோ­னீ­சியா சேமித்து வைத்­துள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!