ஹாங்காங் உணவகங்களில் ஆறு மணிக்கு மேல் உணவருந்தத் தடை

ஹாங்காங் உணவகங்களில் ஆறு மணிக்கு மேல் உணவருந்தத் தடை

2 mins read
40dce8af-2e15-4efb-8984-509e3d77a9f7
ஹாங்காங்கில் உள்ள ஒரு உணவகத்தின் முன் காத்திருக்கும் வாடிக்கையாளர்கள். கிருமித்தொற்று அதிகரித்துள்ளதால் புதிய கட்டுப்பாடுகளை ஹாங்காங் அரசாங்கம் அறிவித்துள்ளது. உடற்பயிற்சி மற்றும் அழகு நிலையங்களை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. படம்: இபிஏ -

ஹாங்­காங்: ஹாங்­காங்­கில் கொவிட்-19 மூன்­றா­வது அலை உச்­சக்­கட்­டத்தை எட்­டி­யி­ருந்­தா­லும் வெளியே சென்று வீடு திரும்­பு­வ­தற்கு பாது­காப்­பான சூழல் நிலவு­கிறது. தற்­போ­தைய இத­மான பரு­வ­நி­லையை அனு­ப­வித்­துக் கொண்­டி­ருக்­கும் மக்­கள் ஆண்­டு­இறுதி விழா காலத்­துக்­கும் தயா­ராகி வரு­கின்­ற­னர். ஆனால் தலைமை நிர்­வாகி கேரி லாம் கிரு­மித்­தொற்று பர­வ­லைக் குறித்து எச்­ச­ரித்­துள்­ளார். புதிய தீவி­ர­மான கட்­டுப்­பா­டு­கள் அம­லாக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

நவம்­பர் மாதம் கடைசி இரண்டு வாரங்­களில் கிரு­மித்­தொற்று மீண்­டும் தலை­தூக்­கி­யது. இந்த அலை­யில் இளம் நோயா­ளி­களே அதி­கம் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர் என்று கேரி லாம் தெரி­வித்­தார்.

"முந்­தைய அலை­யில் கிரு­மித்­தொற்­றால் மோச­மாக பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கை ஒற்றை இலக்­காக இருந்­தது. தற்­போது இது 36க்கு அதி­க­ரித்­துள்­ளது.

"நாற்­பது பேருக்கு மேல் மோச­மான உடல்­நி­லை­யில் தீவிர சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர். தீவிர சிகிச்சை பிரி­வு­கள் அதி­க­ரிக்­கப்­பட்டு வருகின்றன," என்று அவர் கூறி­னார்.

"தீவிர சிகிச்சை பெற்று வரு­ ப­வர்­களில் ஆறு பேர் 60 வய­துக்­குக் கீழ் உள்­ள­வர்­கள். இரு­வர் 50 வய­துக்கு உட்­பட்­ட­வர்­கள். மோச­மான உடல்­நி­லை­யில் சிகிச்சை பெற்று வரு­ப­வர்­களில் ஒன்­பது பேர் அறு­பது வய­துக்­கும் இரு­வர் 50 வய­துக்­கும் உட்­பட்­ட­வர்­கள்.

"கடந்த கொவிட்-19 அலை­யால் மோச­மாக, தீவி­ர­மாக பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் அனை­வ­ரும் முதி­யோர்­கள்," என்று அவர் சுட்­டிக்­காட்­டி­னார்.

"உறுதி செய்­யப்­பட்ட கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­களில் தொடர்­பு­க­ளின் தடங்­க­ளைக் கண்­ட­றிய முடி­யாத சம்­ப­வங்­க­ளின் எண்­ணிக்கை மூன்­றில் ஒரு பங்கு," என்று அவர் குறிப்பிட்டார்.

இத­னால் புதிய கடு­மை­யான கட்­டுப்­பா­டு­க­ளுக்கு மன­த­ள­வில் தயார்­ப­டுத்­திக்­கொள்ள வேண்­டும் என்று அவர் கேட்­டுக் கொண்­டார். மக்­கள் நட­மாட்­டத்­தைக் கட்­டுப்­ ப­டுத்­து­வதே முதல் நட­வ­டிக்­கை­யாக இருக்­கும் என்றார் அவர்.

இதற்­கி­டையே உணவு, சுகா­தார துறை நேற்று புதிய கட்­டுப்­பா­டு­களை அறி­வித்­தது. மாலை 6.00 மணி முதல் மறு­நாள் காலை 4.53 வரை உண­வகங்­களில் உண­வ­ருந்த அனு­ம­தி­யில்லை.

மற்ற நேரங்­களில் மேசைக்கு இரு­வர் மட்­டுமே உண­வ­ருந்­த­லாம். புதிய கட்டுப்பாடுகள் இம்­மா­தம் 10ஆம் தேதி­யி­லி­ருந்து 23ஆம் தேதி வரை அம­லில் இருக்­கும்.