ஃபைசர் தடுப்பூசி போட்டுக்கொண்ட 2 சுகாதாரப் பணியாளர்களுக்கு ஒவ்வாமை; புதிய அறிவுறுத்தல்கள் வெளியீடு

பிரிட்டனில் பைசர் தடுப்பூசி போட்டுக்கொண்ட 2 பேருக்கு ஒவ்வாமை விளைவுகள் ஏற்பட்டுள்ளதால், அந்நாட்டு மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு புதிய அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது.

பைசர்-பயோஎன்டெக் உருவாக்கியுள்ள தடுப்பூசியைப் பயன்படுத்த பிரிட்டன் அரசு அனுமதி வழங்கிய நிலையில், முதற்கட்டமாக கொரோனா தடுப்பு முன்களப் பணியாளர்கள், முதியவர்கள் மற்றும் நோய் பாதிப்பு அதிகம் உள்ளவர்களுக்கு அதைச் செலுத்தும் பணி தொடங்கியது.

அவ்வாறு தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் சுகாதாரப் பணியாளர்கள் 2 பேருக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர்களுக்கு மாற்று மருந்து கொடுக்கப்பட்டது. மேலும், பிரிட்டன் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு புதிய அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது.

ஒருசில மருந்துகள், உணவுகள் மற்றும் தடுப்பூசிகளால் ஒவ்வாமை அல்லது பக்கவிளைவுகள் ஏற்படும் சாத்தியமுள்ளவர்கள் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தடுப்பூசி போடுவதால் சிலருக்கு இதுபோன்ற பக்க விளைவுகள் ஏற்பட்டாலும் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசியால் ஒவ்வாமை ஏற்பட்ட 2 சுகாதார பணியாளர்களுக்கும் ஏற்கனவே ஒவ்வாமை பிரச்சினை இருந்ததாகக் கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!