தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜோ பைடன், கமலா ஹாரிசை கௌரவித்த 'டைம்ஸ்' சஞ்சிகை

1 mins read
4e8c4ad7-3bd5-46dd-809e-d7823eb28786
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன், துணை அதிபராகத் தேர்வு பெற்றுள்ள கமலா ஹாரிஸ் ஆகிய இருவரையும் இவ்வாண்டின் சிறந்த மனிதர்களாக 'டைம்ஸ்' சஞ்சிகை அறிவித்துள்ளது. படம்: ஏஎஃப்பி -

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன், துணை அதிபராகத் தேர்வு பெற்றுள்ள கமலா ஹாரிஸ் ஆகிய இருவரையும் இவ்வாண்டின் சிறந்த மனிதர்களாக 'டைம்ஸ்' சஞ்சிகை அறிவித்துள்ளது.

அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் கொரோனா தொற்றுத் தடுப்புப் பணிக்குழுவின் முதன்மை உறுப்பினர்களில் ஒருவரான ஆன்டனி ஃபௌசி மற்றும் முன்கள சுகாதாரப் பராமரிப்புப் பணியாளர்கள், அதிபர் டிரம்ப் ஆகியோருடன் இன நீதி இயக்கம் எனும் அமைப்பும் விருதுக்கான இறுதிப் பட்டியலில் இடம்பெற்றிருந்தது.

'அமெரிக்காவின் கதை மாறுகிறது' எனும் தலைப்புடன் 78 வயதான திரு பைடனின் படத்தையும் 58 வயதான திருவாட்டி கமலாவின் படத்தையும் 'டைம்ஸ்' சஞ்சிகை தனது முகப்பு அட்டையில் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட திருவாட்டி கமலா ஹாரிஸ், அமெரிக்காவின் துணை அதிபராகப் பொறுப்பேற்கவிருக்கும் முதல் பெண்மணி என்பது குறிப்பிடத்தக்கது.

1927ஆம் ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் 'டைம்ஸ்' சஞ்சிகை இந்த விருதை வழங்கி வருகிறது.

இதனிடையே, அமெரிக்காவின் புகழ்பெற்ற கூடைப்பந்தாட்ட வீரரான லெப்ரோன் ஜேம்ஸ், 35, 'ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரராக' தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.அதேபோல, 'பிடிஎஸ்' எனும் எழுவர் அடங்கிய கொரிய பாப் இசைக் குழு ஆண்டின் சிறந்த பொழுதுபோக்காளருக்கான விருதைத் தட்டிச் சென்றது.

குறிப்புச் சொற்கள்