தொலைபேசி வழி மோசடி; $228,000 இழந்த மாது

தொலைபேசி வழி மோசடி; $228,000 இழந்த மாது

1 mins read
cadb018f-4ec9-4fde-a8c9-2ceb7e6b6446
படம்: தி நியூ பேப்பர் -

மலேசியாவின் நெகிரி செம்பிலானில் உள்ள டம்பின் பகுதியில் தொலைபேசி மோசடியில் 59 வயது மாது ஒருவர் 694,000 ரிங்கிட் (S$228,000) பணத்தை இழந்திருக்கிறார்.

கடந்த அக்டோபர் 27ஆம் தேதி, கள்ளப்பணம் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாக அந்த மாதை குற்றம் சாட்டியது தொலைபேசி அழைப்பு ஒன்று. அந்த மாது கைது செய்யப்படலாம் என்றும் அந்த அழைப்பில் பேசிய நபர் அச்சுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, அந்த மாதின் வங்கிக் கணக்கு, இணையம் வழியாக அதனை அணுகத் தேவையான மறைச்சொல் உட்பட தகவல்கள் போன்றவற்றை தணிக்கை செய்வதற்குத் தேவை என மோசடி நபர்கள் பெற்றுக்கொண்டனர்.

அந்த மாதின் கணக்கில் RM363,900 இருந்ததாகக் கூறப்பட்டது. மேலும், அந்த மாதின் பிணைக்காக RM260,000 தொகையும் சட்டச் செலவுக்காக RM70,000 தொகையும் செலுத்துமாறு அந்தப் பெண்ணிடம் கூறப்பட்டது.

அடுத்த சில நாட்களில் அந்த மாதின் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்படுவதாக குறுந்தகவல்களை அந்த மாது பெற்றார். ஆனால், அந்தப் பணம் அவருக்கு திருப்பி செலுத்தப்படும் என்று மோசடிக்காரர்கள் தெரிவித்திருந்ததால அவர் அதனைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

டிசம்பர் 12ஆம் தேதி டம்பின் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக முன்னிலையாகும்படி அந்த மாதை மோசடிக்காரர்கள் கேட்டுக்கொண்டனர்.

அதே நாளில், பிணைக்காக இன்னும் RM135,000 செலுத்துமாறு அந்தப் பெண்ணிடம் மோசடிக்காரர்கள் கோரினர். ஆனால், தன்னிடம் பணம் இல்லை என்று அந்த மாது கூறிவிட்டார்.

நீதிமன்றத்துக்கு சென்றபோதுதான் தாம் ஏமாற்றப்பட்டது அந்தப் பெண்ணுக்குத் தெரியவந்தது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்