தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கூகல் சேவைத் தடை சரிசெய்யப்பட்டது

1 mins read
704a67a1-d38f-4071-9365-c7893b88b667
கூகல் சேவைகள் சிறிது நேரத்தில் வழக்கநிலைக்குத் திரும்பின. படம்: ராய்ட்டர்ஸ் -

உலகம் முழுவதும் கூகல் நிறுவனத்தின் யூடியூப், ஜிமெயில், கூகல் டாக்ஸ், கூகல் டிரைவ் போன்ற செயலிகளுக்கு சற்றுமுன் சேவைத் தடை ஏற்பட்டிருப்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

மின்னஞ்சல் அனுப்புவது போன்ற அலுவலகப் பணிகளுக்காக ஏராளமானோர் கூகல் சேவையைப் பயன்படுத்துகின்றனர்.

அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா உள்ளிட்ட உலகின் பல பகுதிகளில் 12,000க்கும் அதிகமான யூடியூப் பயனாளர்கள் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், சேவைத் தடை ஏற்பட்ட சிறிது நேரத்திலேயே பிரச்சினை நிவர்த்தி செய்யப்பட்டு கூகல் செயலிகள் வழக்கநிலைக்குத் திரும்பின.

இந்தச் சேவைத் தடை குறித்து கூகல் நிறுவனத்திடம் இருந்து விளக்கம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்