தடுப்பூசி: ஆசிரியர்களுக்கு முன்னுரிமை

தடுப்பூசி: ஆசிரியர்களுக்கு முன்னுரிமை

1 mins read
a8cb0176-536d-4e95-86e9-09feb36a7042
படம்: ராய்ட்டர்ஸ் -

தடுப்பூசி போட முன்னுரிமை அளிக்கப்படும் துறையினரோடு ஆசிரியர்களும் சேர்க்கப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் யுனிசெஃப் அமைப்பு நேற்று கேட்டுக்கொண்டது.

அவ்வாறு ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளித்தால்தான் கல்விக்கூடங்கள் தங்குதடையின்றி செயல்பட முடியும் என்றும் அந்த அமைப்பு தெரிவித்தது.

"கொவிட்-19 நெருக்கடியால் உலகம் முழுதும் குழந்தைகளின் கல்வி பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சமூகத் தொற்றுக்கு பள்ளிகள் முக்கிய காரணி இல்லை என்பதை இதன் மூலம் உறுதி செய்யலாம்," என்று யுனிசெஃப் தலைவர் ஹென்ரிட்டா ஃபோர், ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.