உலகின் இரண்டாவது ஆகப்பெரிய சிகரெட் தயாரிப்பு நிறுவனமான 'பிரிட்டிஷ் அமெரிக்கன் டொபேக்கோ' (பிஏடி) தயாரிக்கும் கொவிட்-19 தடுப்பூசி மருந்தை மனிதர்களிடம் செலுத்திப் பார்க்கும் பரிசோதனைக்கு அமெரிக்க சுகாதார ஒழுங்கமைப்பு ஒப்புதல் அளித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முதற்கட்ட பரிசோதனை கூடிய விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் பரிசோதனை முடிவுகள் வெளியிடப்படக் கூடும் என்று பிஏடி நிறுவனம் தெரிவித்தது.
கொவிட்-19 தடுப்பூசிகளைத் தயாரிப்பதாக கடந்த ஏப்ரலில் இந்நிறுவனம் தெரிவித்து இருந்தது.


