மலேசியாவில் 2 இடைத்தேர்தல்கள் ஒத்திவைப்பு

1 mins read
4ff8337b-cf98-4e60-8e40-414daf244150
படம்: ராய்ட்டர்ஸ் -

மலேசியாவின் பேராக் மாநிலம், கிரிக் நாடாளுமன்றத் தொகுதியிலும் சாபா மாநிலம், புகாயா சட்டமன்றத் தொகுதியிலும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவ்விரு தொகுதிகளிலும் அடுத்த மாதம் 16ஆம் தேதி நடைபெறவிருந்த 2 இடைத் தேர்தல்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கொவிட்-19 சூழலில் இடைத்தேர்தல் நடத்துவதால் ஏற்படக்கூடிய மோசமான தாக்கத்தைக் கருத்தில்கொண்டு இவ்விரு தொகுதிகளிலும் அவசர நிலையை அறிவிக்க மலேசிய மாமன்னர் ஒப்புதல் அளித்துள்ளார்.

மலேசிய பிரதமர் முகைதீன் யாசின் இன்று வெளியிட்ட அறிக்கையில் இதனைத் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்