தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நிலா மண்ணைப் பிற நாடுகளுடன் பகிர்ந்துகொள்ளும் சீனா

1 mins read
12a18514-28d6-43af-a9ff-c6d109f16bf9
(படத்தில்) நிலவில் இருந்து திரும்பிய சாங்கே விண்கலத்தின் பகுதியை ஆராயும் அறிவியலாளர்கள். படம்: ராய்ட்டர்ஸ் -

'சாங்கே-5' விண்கலம் நிலவில் இருந்து சேகரித்து வந்த கல், மண் மாதிரிகளின் ஒரு பகுதியையும் ஆய்வுத் தரவுகளையும் மற்ற நாட்டு அறிவியல் வல்லுநர்களுடன் பகிர்ந்துகொள்ள இருப்பதாகச் சீனா தெரிவித்துள்ளது. நிலவில் இருந்து பூமிக்குத் திரும்பிய அந்த விண்கலத்தின் ஒரு பகுதி,

சீனாவின் தன்னாட்சிப் பகுதியான 'இன்னர் மங்கோலியா' பகுதியில் நேற்று அதிகாலை தரையிறங்கியது. நிலவை ஆய்வு செய்வதற்காக கடந்த மாதம் 24ஆம் தேதி சாங்கே-5 விண்கலத்தை சீனா ஏவியது. அந்த விண்கலம் இம்மாதத் தொடக்கத்தில் நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது.

அமெரிக்கா, ரஷ்யாவிற்குப் பிறகு நிலவிலிருந்து கல்லையும் மண்ணையும் சேகரித்து வந்த மூன்றாவது நாடு சீனா.

தொடர்புடைய செய்திகள்