மலேசியாவில் மேலும் 1,683 பேருக்கு கொரோனா

மலேசியாவில் மேலும் 1,683 பேருக்கு கொரோனா

1 mins read
e121d522-9b69-4ab0-8575-ae9eae8e0c98
படம்: ராய்ட்டர்ஸ் -

மலேசியாவில் மேலும் 1,683 பேருக்கு இன்று (டிசம்பர் 18) கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.

இதன் மூலம் அந்நாட்டில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 90,816ஆக அதிகரித்துள்ளது.

கிருமித்தொற்று காரணமாக மலேசியாவில் இதுவரை 432 உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன.

கொரோனாவிலிருந்து குணமடைந்து 1,214 பேர் வீடு திரும்பியிருப்பதாக மலேசிய சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறினர். இதுவரை மொத்தம் 75,244 பேர் குணமடைந்துவிட்டனர்.

தற்போது 106 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்