தென்கொரியாவின் சோல் நகரில் கொரோனா கிருமித்தொற்று பரிசோதனைக்கென அமைக்கப்பட்ட இந்தத் தற்காலிக வளாகத்தில் மக்கள் நேற்று வரிசையாக நின்று காத்திருந்தனர்.
புதிதாக உறுதிசெய்யப்படும் தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை தினமும் 1,000ஐத் தாண்டி வரும் நிலையில் சோல் நகரில் மட்டும் 423 புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் நேற்று முன்தினம் பதிவாகின.
சோலின் புறநகர்ப் பகுதிகளில் அதிகமானோர் வசிப்பதால் கிருமிக் குழுமங்கள் ஏற்பட்டு, புதிய கிருமி அலை உருவாகிவிட்டது.

