மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப்பின் தாயார் காலமானார்; அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப்பின் தாயார் காலமானார்; அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

1 mins read
e9c0cb79-9998-43cf-9c5b-c52d90f70f03
மலேசியாவின் இரண்டாவது பிரதமர் அப்துல் ரசாக் ஹுசேனின் மனைவியான திருவாட்டி ராஹா முகமது நோவாவின் உடல் அரசு மரியாதையுடன் கோலாலம்பூரின் தேசிய மசூதியில் நல்லடக்கம் செய்யப்படுகிறது. -
multi-img1 of 2

மலேசியாவின் இரண்டாவது பிரதமர் அப்துல் ரசாக் ஹுசேனின் மனைவியான திருவாட்டி ரஹா முகமது நோவாவின் உடல் அரசு மரியாதையுடன் கோலாலம்பூரின் தேசிய மசூதியில் இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறது.

திருவாட்டி ரஹா, மலேசியாவின் முன்னாள் பிரதமரான திரு நஜிப் ரசாக்கின் தாயாருமாவார். திருவாட்டி ரஹா நேற்று காலமானார். அவருக்கு வயது 87.

அரசியல் பிளவுகளையும் கடந்து திருவாட்டி ரஹாவின் மறைவுக்கு பல்வேறு பல்வேறு அரசியல் தலைவர்கள் உட்பட முக்கிய நபர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

மலேசிய அரசர் சுல்தான் அப்துல்லா அகமது ஷா, அரசியார் அஸிஸா அமினா மைமூனா இஸ்கந்தியா ஆகியோரும் தங்களது இரங்கலைத் தெரிவித்தனர்.

சிலாங்கூர் மன்னர் சுல்தான் ஷரஃபுதீன் இட்ரிஸ் ஷா, பேராக் மன்னர் சுல்தான் நஸ்ரின் ஷா ஆகியோரும் மரியாதை செலுத்தினர்.

திரு நஜிப்பின் குடும்பத்தாருக்கு இரங்கலைத் தெரிவித்த மலேசியப் பிரதமர் முஹைதின் யாசின், அன்னாரின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்," என்றார்.

திருவாட்டி ரஹாவின் மறைவுக்கு சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங், ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்