தென்கொரியாவில் மருத்துவ நெருக்கடி

தென்கொரியாவில் மருத்துவ நெருக்கடி

1 mins read

சோல்: தென்­கொ­ரி­யா­வில் கொரோனா பாதிப்பு மீண்­டும் மோச­ம­டைந்து வரு­கிறது. அந்­நோ­யால் பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை மள­ம­ள­வென அதி­க­ரித்து வரும் வேளை­யில், மருத்­து­வ­ம­னை­களில் படுக்கை பற்­றாக்­குறை நில­வு­கிறது.

தென்­கொ­ரி­யா­வில் மேலும் 1,053 பேருக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டி­ருப்­ப­தாக கொரிய நோய்க்

கட்­டுப்­பாட்டு, தடுப்பு ஆணை­யம் தெரி­வித்­துள்­ளது. தொடர்ந்து நான்கு நாட்­க­ளாக அன்­றா­டப் பாதிப்பு 1,000க்கும் அதி­க­மா­கப் பதி­வா­கி­யுள்­ளது. இது­வரை மொத்­தம் 48,570 பேருக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டுள்ள நிலை­யில், 659 பேர் மாண்­டு­விட்­ட­னர். கொரோனா கிரு­மித்­தொற்­றால் தென்­கொ­ரியா முத­லில் பாதிப்­புக்­குள்­ளா­ன­போது கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோ­ரு­டன் நெருங்­கிய தொடர்­பில் இருந்­த­வர்­களை அடை­யா­ளம் காண தென்­கொ­ரிய அதி­கா­ரி­கள் மும்­மு­ரம் காட்­டி­ய­தால் கைமீறி போக­வி­ருந்த நிலை

கட்­டுக்­குள் கொண்டு வரப்­பட்­ட­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

ஆனால் அண்­மை­யில் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை வெகு­வாக அதி­க­ரித்­துள்­ளது. இதன் கார­ண­மாக மருத்­து­வ­ ம­னை­களில் படுக்கை பற்­றாக்­குறை ஏற்­பட்­டுள்­ளது. இதை­

அடுத்து, மொத்த படுக்­கை­களில் ஒரு விழுக்­காடு படுக்­கை­களை கொவிட்-19 நோயா­ளி­க­ளுக்கு ஒதுக்­கி­வைக்­கு­மாறு பிர­தான பொது மருத்­து­வ­ம­னை­க­ளுக்­கும் தேசிய பல்­க­லைக்­க­ழக மருத்­து­வ­

ம­னை­க­ளுக்­கும் தென்­கொ­ரிய சுகா­தார அமைச்­சு உத்தரவிட்டுள்ளது.