தாய்லாந்தின் அன்றாட கிருமித்தொற்றுச் சம்பவத்தின் தினசரி எண்ணிக்கை 500க்கு அதிகமாக உயர்ந்ததை அடுத்து அந்நாட்டில் 10,000க்கும் அதிகமானோரை சோதனை செய்யத் திட்டமிடுகிறது. பாதிக்கப்பட்டோரில் பெரும்பாலானோர் வெளிநாட்டு ஊழியர்கள் என்று அதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்தார்.
கிருமிப்பரவல் தொடங்கிய தென்மேற்கு மாநிலமான சமுட் சகோனில் 10,300 சோதனைகளை வரும் புதன்கிழமைக்குள் நடத்த தாய்லந்தின் கொவிட்-19 பணிக்குழு திட்டமிடுகிறது. நாடு முழுவதும் சோதனைகள் தொடரும் என்றும் அக்குழு தெரிவித்தது.
சீனாவுக்கு வெளியே கொவிட்-19 கிருமிப்பரவலால் பாதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட முதல் நாடான தாய்லாந்தில் இதுவரை 4,907 கிருமித்தொற்றுச் சம்பவங்களும் 60 மரணங்களும் பதிவாகியுள்ளன. தாய்லாந்தில் இன்று புதிதாக 576 பேருக்குக் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்டோரில் 516 வெளிநாட்டு ஊழியர்கள் சம்பவங்கள் சமுட் சகோனிலுள்ள இறால் சந்தை ஒன்றுடன் தொடர்புடையவை.

