வானில் இணையும் வியாழன், சனி கோள்கள்

1 mins read
ec7ebe21-2a92-4f64-aced-6318c63d83e7
வியாழன், சனி கோள்கள் நெருக்கமாக வரும் அரிய நிகழ்வு 397 ஆண்டுகளுக்கு பிறகு இன்று இடம்பெறுகிறது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

இந்த ஆண்டின் கடைசி நிகழ்வாக இன்று (டிசம்பர் 21) வியாழன் மற்றும் சனி கோள்கள் ஒரே நேர்க்கோட்டில் சந்திக்கும் அரிய நிகழ்வு நடைபெறுகிறது. கிட்டத்தட்ட நான்கு நூற்றாண்டுகளுக்கு பின் இந்த நிகழ்வு இடம்பெறுகிறது. கடைசியாக 1623ஆம் ஆண்டு இரு கோள்களும் ஒரே நேர்க்கோட்டில் சந்தித்தன. அந்த நிகழ்வு 5 நிமிடங்கள், 10 விநாடிகள் நீடித்தது. இன்று இரவு நடைபெறும் நிகழ்வு 6 நிமிடங்கள், 6 விநாடிகள் நடைபெறும் என கணிக்கப்பட்டுள்ளது.

கண்ணாடி மற்றும் இதர எந்த உபகரணங்களும் இல்லாமல் இந்த நிகழ்வை வெறும் கண்களால் பார்க்க முடியும். சூரியன் மறையும் வரை காத்திருந்து, பின்னர் வானத்தின் தென்மேற்கு திசையை நோக்கிப் பார்க்க வேண்டும். இதில் சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய கிரகத்திற்கு மேலே இடதுபுறம் தோன்றுவதால் சனி கோள் சற்று மங்கலாக தெரியக்கூடும்.

'பைனாகுலர்' அல்லது சிறிய 'டெலஸ்கோப்' வழியாக இந்த நிகழ்வை சிறந்த முறையில் பார்க்கலாம்.

தொடர்புடைய செய்திகள்