இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவில் கொரோனா கிருமிப் பரவலுக்கு எதிரான கட்டுப்பாடுகள் இன்று முதல் மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளன. அதாவது ஜனவரி 3ஆம் தேதி வரை கட்டுப்பாடுகள் நடப்பில் இருக்கும்.
ஜகார்த்தாவில் தொடர்ந்து கிருமித்தொற்று அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் விடுமுறைக் காலத்தில் நோய் மேலும் பரவாமல் இருக்க கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளன.
ஜகார்த்தாவில் பத்து மில்லியனுக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். மக்கள் நெருக்கடிமிக்க இந்த நகரத்தில் அலுவலகங்கள், உணவகங்கள், கடைத்தொகுதிகள் இயங்க வரம்பு விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் பொதுக் கூட்டங்கள் நடத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டது. விடுமுறைக் காலத்தில் நகருக்குள் நுழையும் அனைவரும் விரைவு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

