தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டார் ஜோ பைடன்

1 mins read
96572f01-b41e-4c9a-a909-b7610c959fa7
அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள திரு ஜோ பைடனுக்கு ஃபைசர் நிறுவன தடுப்பூசியின் முதல் டோஸ் நேற்று (டிசம்பர் 21) போடப்பட்டது. படம்: ஏஎஃப்பி -

அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள திரு ஜோ பைடனுக்கு ஃபைசர் நிறுவன தடுப்பூசியின் முதல் டோஸ் நேற்று (டிசம்பர் 21) போடப்பட்டது.

கொரோனா தொற்று பாதிப்பு, அதன் தொடர்பிலான உயிரிழப்புகள் ஆக அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் ஃபைசர்-பயோன்டெக், மோடர்னா நிறுவனங்களின் இரு தடுப்பூசிகளை அவசரகாலத்துக்குப் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நாடுகளிலும் தலைவர்கள் முதலில் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் நிலையில், திரு பைடனும் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளார்.

அமெரிக்காவின் டெலாவேர் மாகாணத்தில் நியூவார்க் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அவருக்கு கொரோனா தடுப்புக்கான பைசர் மருந்தின் முதல் டோஸ் போடப்பட்டது.

குறிப்புச் சொற்கள்