லண்டன்: லாரியில் 39 பேர் இறந்துகிடந்த வழக்கில் இருவர் கொலைக்குற்றம் புரிந்தது கண்டுபிடிப்பு

லண்டன்: லாரியில் 39 பேர் இறந்துகிடந்த வழக்கில் இருவர் கொலைக்குற்றம் புரிந்தது கண்டுபிடிப்பு

1 mins read
ca6c917e-ec11-4302-9374-c67dce8067de
பிரிட்டன், வியட்நாம் மட்டுமின்றி உலக அளவில் கவனத்தை ஈர்த்த இந்த மரணங்கள் ஆசியா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து மேற்கத்திய நாடுகளுக்கு சட்ட விரோதமாக ஆட்கள் கடத்தப்படுவது வெளிச்சத்துக்கு வந்தது. படம்: ஏஎஃப்பி -

லண்டனுக்கு அருகில் கடந்த ஆண்டு குளிரூட்டப்பட்ட லாரியில் 39 வியட்நாமியர்கள் இறந்து கிடந்த வழக்கில் அவர்களை இருவர் கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டன், வியட்நாம் மட்டுமின்றி உலக அளவில் கவனத்தை ஈர்த்த இந்த மரணங்கள் ஆசியா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து மேற்கத்திய நாடுகளுக்கு சட்ட விரோதமாக ஆட்கள் கடத்தப்படுவது வெளிச்சத்துக்கு வந்தது.

வடக்கு அயர்லாந்தைச் சேர்ந்த ஐமான் ஹாரிசன் எனும் 24 வயது லாரி ஓட்டுநர் மீது 39 பேரைக் கொலை செய்தது, சட்டவிரோத குடிநுழைவுக்கு உதவியது ஆகிய குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

தென்கிழக்கு இங்கிலாந்தின் எஸ்ஸெக்சைச் சேர்ந்த கோர்கே நிக்கா எனும் ஆடவர் மீது இதே குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்தக் குற்றச் செயலின் தொடர்பில் ஏற்கெனவே இருவர் தங்கள் பங்கை ஒப்புக்கொண்டுள்ளனர்.

டிரக்குக்குள் இறந்து கிடந்தவர்கள் 15 முதல் 44 வயதுக்குட்பட்டவர்கள். வியட்நாமின் ஏழ்மை சூழந்த பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அவர்கள் என்று கூறப்பட்டது.