மந்தமாகிப்போன சுற்றுலாத் துறையை மீண்டெழச் செய்யும் நோக்கில் 10 ஆண்டுகளுக்கான திட்டம் ஒன்றை மலேசியா இன்று (டிசம்பர் 23) தொடங்கியுள்ளது.
கொரோனா தொற்றுப் பரவலால மலேசியாவின் சுற்றுலாத் துறை 100 பில்லியன் ரிங்கிட்டுக்கும் (S$32.8 பில்லியன்) அதிகமான இழப்பைச் சந்தித்துள்ளது.
கடந்த ஆண்டு 28 மில்லியன் மக்கள் மலேசியாவைப் பார்வையிட்ட நிலையில், அந்த எண்ணிக்கையை இவ்வாண்டு 30 மில்லியனாக உயர்த்த 'விசிட் மலேசியா 2020' திட்டத்தை மலேசியா முன்பு உருவாக்கியிருந்தது.
ஆனால், தொற்றுப் பரவல் அனைத்துலக அளவில் அதிகரிக்கவே, கடந்த மார்ச் மாதத்தில் வெளிநாட்டினருக்கு எல்லைகளை மூட வேண்டிய நிலை மலேசியாவுக்கு ஏற்பட்டது.
போட்டித்தன்மையை வலுப்படுத்துவது, நீடித்து நிலைத்திருக்கக்கூடிய அனைவரையும் உள்ளடக்கிய சுற்றுலா, எதிர்காலப் பேரிடர்களைச் சமாளிப்பதற்கான திட்டம் போன்றவற்றில் இந்த 10 ஆண்டு திட்டம் கவனம் செலுத்தும் என்று திட்டத்தை அறிவித்த பிரதமர் முகைதீன் யாசின் தெரிவித்தார்.

