மலேசியா கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது

1 mins read
fe62a876-cfab-4cc2-9a79-68062d63ac58
படம்: ராய்ட்டர்ஸ் -

மலேசியா தனது பயணக் கட்டுப்பாடுகளை நாடு தழுவிய அளவில் நீக்கியுள்ளது.

இதனால் கிறிஸ்துமஸ் விடுமுறையில் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்ப முடியும்.

ஆனால், கிருமித்தொற்று அச்சம் காரணமாக பலரும் பயணம் செய்யத் தயக்கம் காட்டி வருகின்றனர்.

எனினும், கிருமித் தொற்றுகள் அன்றாடம் 1,000க்கும் அதிகமாகப் பதிவாவதால் பலரும் பயணங் களைத் தவிர்ப்பதாக என்று செய்திகள் தெரிவித்தன.

இன்று அங்கு 1,348 புதிய தொற்றுகள் பதிவாகின.

இதற்கிடையே அஸ்ட்ராஜெனெகா-ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக தடுப்பூசி மலேசியாவிற்கு 2021 முதல் பாதியில் கிடைக்கும் என அந்த மருந்து நிறுவனம் கூறியுள்ளது.

மேலும் ஸ்பூட்னிக் வி தடுப்பு மருந்தைப் பெற ரஷ்யாவுடன் பேச்சு நடத்துகிறது. ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பு மருந்தை கூடுதலாகப் பெறவும் மலேசியா முயன்று வருகிறது.

குறிப்புச் சொற்கள்