தமக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று சமூக ஊடகக் காணொளியில் குறிப்பிட்ட கறுப்பின மருத்துவர் உயிரிழப்பு

தமக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று சமூக ஊடகக் காணொளியில் குறிப்பிட்ட கறுப்பின மருத்துவர் உயிரிழப்பு

1 mins read
8a8beff3-5173-4ec0-b891-43c3ea609667
மகன் ஹென்றி முகம்மதுவுடன் மருத்துவர் சூசன் மூர். படம்: நியூயார்க் டைம்ஸ் -

அமெரிக்காவின் இண்டியானாபோலிஸில் அமைந்துள்ள கொவிட்-19 மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த கறுப்பின மருத்துவரான 52 வயது டாக்டர் சூசன் மூர், வெள்ளை இனத்தவரான மருத்துவர் தமக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை என்று சில நாட்களுக்கு முன்பு காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில், தாம் கருப்பினத்தவராக இருப்பதால் தமக்கு வழங்கப்பட வேண்டிய சிகிச்சை முழுமையாக வழங்கப்படவில்லை என்று தெரிவித்திருந்தார்.

தமக்கு வலி இருந்ததைக் குறிப்பிட்டபோது தமக்கு சிகிச்சை அளித்த வெள்ளை இனத்தவரான மருத்துவர் அதற்கு உரிய சிகிச்சையும், மருத்துவரான தமக்கு உரிய மதிப்பையும் அளிக்கவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து, சிகிச்சை முடிந்துவிட்டதாகக் கூறி வீட்டுக்கு அனுப்பப்பட்டார் மருத்துவர் சூசன். ஆனால், இம்மாதம் 20ஆம் தேதி அவர் உயிரிழந்துவிட்டதாக அவரது மகன் ஹென்றி முகமது தெரிவித்துள்ளார்.

மருத்துவர் சூசனின் காணொளிப் பதிவு வலைத்தள வாசிகளிடையே மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியது. அவர் உயிரிழந்த விபரம் அவர்களது கோபத்தை மேலும் கிளறியுள்ளது.

குறிப்புச் சொற்கள்