அமெரிக்காவின் டெனஸ்ஸி மாநிலத்தின் தலைநகர் நேஷ்வில் நகரில் வாகனம் ஒன்றிலிருந்து எச்சரிக்கை அறிவிப்பு வெளிவந்ததை அடுத்து அந்த வாகனம் வெடித்துச் சிதறியது. இந்தச் சம்பவத்தில் மூன்று பேர் இலேசாகக் காயமடைந்ததாக போலிசார் தெரிவித்தனர். இந்த வெடிப்பு உள்ளூர் நேரப்படி காலை 6 மணிக்கு நடந்தது.
"இந்த இடத்திலுள்ள அனைவரும் வெளியேறவேண்டும். நீங்கள் இந்த அறிவிப்பைக் கேட்டுக்கொண்டிருந்தால் உடனே வெளியேறுங்கள்," என்று அந்த வாகனத்தில் வைக்கப்பட்ட ஒலிப்பதிவு ஒலித்தது. அதே நேரத்தில் துப்பாக்கிச்சூடு நடந்திருப்பதாகவும் போலிசாருக்கு எச்சரிக்கை வந்தது.
கிறிஸ்மஸ் விடுமுறை என்பதாலும் சம்பவம் நடந்த நேரம் அதிகாலை என்பதாலும் அங்கு மக்கள் நடமாட்டம் மிகவும் குறைவாக இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். விசாரணை தொடர்கிறது.

